Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயா பரதநாட்டியம் பள்ளிக்கூடத்தில் ஒரு பெண் கர்ப்பமானதை தெரிந்துகொண்ட விஜயா அதிர்ச்சியாகிவிட்டார். இதனால் பிரச்சினையாகும் என்பதால் இப்போதைக்கு கொஞ்ச நாள் பரதநாட்டிய பள்ளிக்கூடத்துக்கு லீவ் விடலாம் என்று பார்வதியிடம் சொல்கிறார். பார்வதி இங்கே வந்து பிரச்சினை செய்தால் என்ன பண்ணுவது என்று கேட்கிறார்.
அதற்கு விஜயா உனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிடு, நானும் கொஞ்ச நாள் இங்கே வராமல் இருக்கிறேன் என்று சொல்லி வீட்டிற்கு கிளம்பி விடுகிறார். அடுத்ததாக கிரிஷ் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது ரோகிணியை பார்த்து பேச போகிறார். ரோகிணி ஏற்கனவே டென்ஷனாக இருந்ததால் க்ரிஷ் வந்ததும் வெளியே போக சொல்கிறார்.
ஆனால் க்ரிஷ் போக மாட்டேன் என்று சொல்லிய நிலையில் ரோகிணி அதட்டி வெளியே அனுப்புகிறார். இந்த சத்தத்தை கேட்டு வந்த மீனா, ரோகிணி அடிப்பதை பார்த்து ஏன், கிரிஷை அடிக்கிறீர்கள் என்று கேட்கிறார். உடனே முத்துவும் எழுந்து வந்த நிலையில் ரோகிணி நான் அடிக்கவில்லை, நீங்கள் வேண்டுமென்றால் அவனிடம் கேளுங்கள் என்று சொல்கிறார்.
உடனே முத்து, க்ரிஷ் கிட்ட கேட்ட பொழுது க்ரிஷ் அவங்க என்னை அடிக்கவில்லை என்று பொய் சொல்லி விடுகிறார். பிறகு மீனா, நான் பார்த்தேன் ரோகிணி அடித்தாங்க, இந்த வீட்டில் இருக்க பிடிக்கவில்லை என் பாட்டி வீட்டிற்கு கூட்டிட்டு போங்க என்று க்ரிஷ் சொன்னதாக ரோகினி சொன்னாங்க என மீனா கூறுகிறார். ஆனால் கிரிஷ் நான் அப்படி சொல்லவில்லை பாட்டிக்கு சரியாகும் வரை இங்கே இருக்கிறேன் என்று தான் சொன்னேன் என பொய் சொல்லி விடுகிறார்.
இதனால் குழப்பமான மீனா, முத்துவிடம் சொல்லி இதில் ஏதோ ஒரு சிக்கல் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க போகிறார். அது மட்டும் இல்லாமல் இப்பொழுது கிரிஷ் மூலம் முத்து மீனாவிற்கு சந்தேகம் வந்ததால் கிரிஷ் அம்மாவை பற்றி விசாரித்து கண்டுபிடிக்கணும் என்று முயற்சி எடுக்க போகிறார்கள். இதன் மூலம் ரோகிணி ரகசியம் அனைத்தும் வெளிவரப் போகிறது.
அடுத்ததாக பரதநாட்டியம் பள்ளிக்கூடத்தில் நடந்த விபரீதத்தால் விஜயா வீட்டுக்கு வந்த பெண் குடும்பத்தில் இருப்பவர்கள் விஜயாவை அடிக்க கை ஓங்குகிறார்கள். அப்பொழுது மீனா, விஜயாவை அடிக்க வந்தவர்களை தடுத்து பேசிக் கொண்டிருக்கும் பொழுதே நீங்க கை நீட்டுவீர்களா? என மாமியாருக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக மீனா கேள்வி கேட்கிறார். குடும்பத்தில் அத்தனை பேரும் இருந்த பொழுது கூட யாரும் விஜயாவுக்காக பேச வரவில்லை.
ஆனால் மீனா நமக்காக பேச வந்து நம் மரியாதையை வாங்கி கொடுத்து விட்டார் என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்த நிலையில் விஜயா மனது கொஞ்சம் கொஞ்சமாக மீனா பக்கம் மாறப்போகிறது.