Kamal: கமல் நடிப்பு அரசியல் என பிசியாக இருக்கிறார். தற்போது அவர் எம்பி ஆகிவிட்ட நிலையில் வாழ்த்துக்கள் ஒரு பக்கம் குவிந்து கொண்டிருக்கிறது. அதேபோல் ஆண்டவர் மகிழ்ச்சி கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் இத்தோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. தன்னுடைய பதவிக்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என அவர் சில பல வேலைகளை செய்கிறார். அதில் அவர் செய்யும் ஹோம் வொர்க் பார்த்து நெருக்கமானவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டு போகிறார்கள்.
அப்படி என்னதான் செய்கிறார் என்று விசாரித்ததில் சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது அவர் கடந்த இரண்டு வாரங்களாக பார்லிமெண்டில் என்னெல்லாம் பேச வேண்டும் என தயார் செய்து கொண்டிருக்கிறாராம்.
முழு அரசியல்வாதியாக மாறிய கமல்
தற்போது நடக்கும் பிரச்சினை என்ன அது குறித்து எப்படி பேசுவது எந்த பிரச்சனைகளை முதலில் தொடங்குவது என ஒரு பெரிய லிஸ்ட்டே போட்டு வைத்திருக்கிறாராம். அது மட்டும் இன்றி தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு என்னென்ன தேவை என சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து தகவல்களை பெற்றுள்ளார்.
மேலும் சினிமா துறைக்கு என்ன வேண்டும் என்று கூட பட்டியல் போட்டு வைத்திருக்கிறாராம். வரும் 25ஆம் தேதி அவர் பதவியேற்க இருக்கிறார். அதற்காகத் தான் இவ்வளவு ஹோம் வொர்க் நடக்கிறது.
ஆனால் மத்திய ஆளும் கட்சி இவரை பேசுவதற்கு அனுமதிப்பார்களா என்பது சந்தேகம் தான். அப்படியே இருந்தாலும் ஆண்டவர் பேசுவதை புரிந்து கொள்வதற்கே அவர்களுக்கு சில நாட்கள் தேவைப்படும்.