Sun tv: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மூன்று முடிச்சு சீரியல், டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியல் ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரை தொடர்ந்து இரண்டாவது இடத்தை பிடிப்பதற்கு முக்கிய காரணம் சூர்யா என்கிற நிவாஸின் நடிப்புதான். இவருடைய நடிப்புக்காக தான் மக்கள் தொடர்ந்து பேராதரவு கொடுத்து வருகிறார்கள்.
அப்படிப்பட்ட இவர் ஏற்கனவே ஜீ தமிழில் புது புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடித்திருக்கிறார். அதில் பரிசயமான பிறகு சன் டிவியில் கிடைத்த வாய்ப்பு தான் மூன்று முடிச்சு. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதால் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்து சின்னத்திரை நாயகன் என்ற பட்டத்தை வென்றிருக்கிறார். நந்தினியை பாதுகாப்பதற்காக சுந்தரவல்லி கண்ணில் விரலை விட்டு ஆட்டி வருகிறார்.
தற்போது கையில் அடிபட்டு இருக்கிறது என்று ஒரு டிராமா போட்டு நந்தினிக்கு ஆபீஸில் கையெழுத்து போடும் அதிகாரத்தை கொடுத்து கெத்தாக காட்டி வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரவல்லி, நந்தினிக்கு எந்த அதிகாரமும் இருக்கக் கூடாது என்று சூழ்ச்சி பண்ண ஆரம்பித்து விட்டார். இப்படி சின்னத்திரையில் சூர்யாவின் நடிப்பு பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ரியாலிட்டி ஷோ மூலம் கலக்கப்போகிறார்.
அதாவது கடந்த வருடம் சன் டிவியில் டாப் குக்கு டுப்பு குக்கு என்ற நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதை அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் சன் டிவி சேனல் வெளியிட்டு விட்டது. அந்த வகையில் இந்த இரண்டாவது சீசனில் கலந்து கொள்ளும் விதமாக நிவாஸ் என்கிற சூர்யா போட்டியாளராக பங்கு பெறுகிறார்.
மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதமாக சிவாங்கி களமிறங்கி இருக்கிறார். இவரை தொடர்ந்து பரத், ஜிபி முத்து, மோனிஷா, மீனாட்சி, அதிர்ச்சி அருண், நிக்கி, கதிர், கமலேஷ் போன்ற போட்டியாளர்களும் பங்கு பெறுகிறார்கள், வழக்கம் போல் இந்த நிகழ்ச்சியை ஜட்ஜ் பண்ணுவதற்கு வெங்கட் பட் தயாராகிவிட்டார்.