Gossip: மூன்றெழுத்து நடிகர் சில வருடங்களாக ரொம்பவே மாறிவிட்டார். மனைவியின் பேச்சை கேட்டு அவர் நடந்து கொள்வது குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது என சத்தம் இல்லாத செய்திகளும் பரவிக் கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த செய்தியை பொய்யாக்க வேண்டும் என நடிகர் அவ்வப்போது குடும்பத்தோடு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஆனாலும் பெரிய குடும்பத்து சர்ச்சை ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது.
தற்போது நடிகர் ஈசிஆர் பக்கம் பிரம்மாண்ட வீட்டை கட்டி முடித்துள்ளார். அங்கு ஏற்கனவே ஒரு சின்ன பார்ட்டி நடந்து இருக்கிறது. ஆனால் இப்போது இரண்டு நாள் முழுவதும் மிகப்பெரும் கொண்டாட்டம் அரங்கேற போகிறது.
மூன்றெழுத்து நடிகரின் 2 நாள் பார்ட்டி
இன்னும் சில தினங்களில் நடிகர் தன்னுடைய ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடப் போகிறார். அதற்காகத்தான் இந்த பார்ட்டி. அதில் இங்கு இருக்கும் திரையுலக பிரபலங்கள் அத்தனை பேரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
ஆட்டம் பாட்டம் என இரண்டு நாட்கள் முழுக்க ஒரே ஜாலிதான். அதேபோல் மும்பை மற்றும் வெளியூரில் இருக்கும் நண்பர்களுக்காக கோவாவிலும் ஒரு பார்ட்டி நடைபெறப்போகிறது. அதற்கான ஏற்பாடுகளையும் நடிகர் செய்துவிட்டார்.
இதுதான் இப்போது திரையுலகம் முழுக்க ஒரே பேச்சாக இருக்கிறது. ஏனென்றால் நடிகர் இந்த மாதிரி கொண்டாட்டங்களுக்கு அப்பாற்பட்டவர் அவருடைய குடும்பமும் அப்படித்தான். அப்படி இருப்பவர் பார்ட்டி கொண்டாடுகிறாரே என ஆச்சரியப்படுகிறது கோடம்பாக்க வட்டாரம்.