Sivakarthikeyan : சினிமாவில் யார் இந்த ஹீரோ என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்த நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது எங்கு பார்த்தாலும் சிவகார்த்திகேயன் ஃபேன் தான் இருக்கிறார்கள்.
மெரினா திரைப்படத்தில் கால் பதித்து தனது திறமையான நகைச்சுவை பேச்சாலும் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்த நாயகன் சிவகார்த்திகேயன். அசையாத ரசிகர்களை வைத்திருக்கும் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் அப்டேட் தான் அவ்வபோது வந்த வண்ணம் இருக்கிறது.
SK செய்த மறைமுக உதவி..
ஒரு பாடலாசிரியராக, கவிஞராக, எழுத்தாளராக தமிழ் சினிமாவில் அறியப்பட்டவர் தான் நா முத்துக்குமார். முதலில் இயக்குனர் பாலு மகேந்திரேனுடன் பணிபுரிந்து சில நாட்களிலேயே பிரபலம் அடைந்தார். தனது திறமையான எழுத்தால் ௨௦௦௦ ஆம் ஆண்டு பாடல் எழுத ஆரம்பித்தார்.
2012 ஆம் ஆண்டு இறப்பதற்கு முன்பு கிட்டத்தட்ட 103 பாடல்களை ஒரே ஆண்டில் எழுதி முடித்து புகழ்பெற்றார் நா. முத்துக்குமார். தனது சினிமா வாழ்க்கையில் 700க்கும் மேற்பட்ட பாடல்களை பதித்துள்ளார்.சினிமாவில் சாதனை படைத்தார்.
தற்போது மறைந்த நா முத்துகுமாரை பற்றி சிவகார்த்திகேயன் பேசியது தான் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சிவகார்த்திகேயன் இப்படி நல்ல உள்ளம் படைத்தவரா என்று ரசிகர்களை பெருமடைய செய்துள்ளது.
” என் எழுத்தில் ஒரு பாடலை பாடினேன் அந்த பாடலுக்கான சம்பளத்தை நெல்சனிடம் கேட்டு, நா முத்துக்குமார் குடும்பத்திற்கு அந்த சம்பளத்தை கொடுத்தேன். இது உதவியாக அல்ல என் கடமையாக செய்தேன்“. சிவகார்த்திகேயன் இப்படி பேசியது தற்போது வைரலாகி வருகிறது.