விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஒரு நாள் போட்டிகளைத் தவிர அனைத்து விதமான கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டனர். இப்பொழுது அவர்களுடைய டார்கெட் 2027 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டி தான் . இந்தியாவிற்கு அதை சாதகமாக முடித்து தர ஆசைப்படுகிறார்கள்
இந்நிலையில் இவர்கள் இருவரை ற்றியும் பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது , வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விளையாட உள்ள ஒருநாள் தொடர் தான், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு கடைசி தொடராக இருக்கும் என பல பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டு வருகிறது.
இதற்கு காரணம் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தான் என்று கூறுகிறார்கள். அவர் பிசிசிஐ வட்டாரத்தில் போதிய பயிற்சி இல்லாமல் ஒரு நாள் போட்டியில் மட்டும் திடீரென வந்து விளையாடுவது அபத்தமானது. இப்படி இருக்கும் பட்சத்தில் ஒருவரது பார்மை எப்படி கணக்கிட முடியும் எனன கேள்வி எழுப்பி வருகிறார் .
செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர்கள் விளையாட உள்ளனர் .இந்த போட்டிகள் அனைத்தும் அடிலைட், பெர்த், ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. அங்கே இவர்கள் விளையாடிய பின் தங்களுடைய ஓய்வு முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை தொடர்ந்து வருகிற டிசம்பர் மாதத்தில் சவுத் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாட உள்ளது . ஒருவேளை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ரிட்டையர்டு ஆவது உறுதியானால், தென்னாப்ரிக்கா தொடரில் விளையாட செய்து, அவர்களுக்கு தகுந்த மரியாதை கொடுத்து விடை அனுப்புவது எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.