Sirakadikkum asai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயா யோகா கிளாஸ் எடுக்கலாம் என்று அதற்கான போட்டோக்களை சுருதி மூலமாக எடுக்கிறார். விஜயாவின்வின் கெட்டப்பை பார்த்து அண்ணாமலை உன்னால் பெருமை வராவிட்டாலும் பரவாயில்லை, வில்லங்கத்தை கொண்டு வந்து சேர்த்திடாதே என்று சொல்கிறார். ஆனாலும் விஜயா யோகா கிளாஸ் நடத்தி டாக்டர் பட்டத்தை வாங்கி ஆக வேண்டும் என்று அதற்கான வேலையில் இறங்கி விட்டார்.
அந்த வகையில் சிந்தாமணி பார்வதி மற்றும் விஜயா மூன்று பேரும் சேர்ந்து விளம்பரம் பண்ணும்பொழுது கிரிஷ் பாட்டி விஜயாவிடம் சிக்கி விடுகிறார். அப்பொழுது விஜயா, கிரிஷ் பாட்டியை கூட்டிட்டு போயி முத்து முன்னாடி நிறுத்தி விடுவார். இதற்கிடையில் மீனாவின் தோழிகளுக்கு முக்கியமான செலவு இருப்பதால் மனோஜ் ஷோரூம் இல் போட்ட பணத்தை திரும்பப் பெறுவதால் என்று கடையில் இருக்கும் ராஜாவிடம் கேட்டிருக்கிறார்.
ஆனால் அவர் பணத்தை தர முடியாது என்று சொல்லி திமிராக பேசியதால் மீனா விடம் வந்து அவர்கள் சொல்கிறார்கள். மீனா இதை நாட்டாமை பண்ணும் விதமாக முத்துவை கூட்டிட்டு மனோஜ் ஷோரூமுக்கு போகிறார். அங்கே போனதும் மனோஜிடம் சொல்லி அந்த பணத்தை திருப்பிக் கொடு இல்லை என்றால் அப்பாவை வரவழைத்து நான் மற்றதை எல்லாம் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்.
உடனே மனோஜ், எதற்கு தேவையில்லாத பிரச்சினை என்று லாக்கரில் இருக்கும் படத்தை எடுக்கப் போகிறார். அப்படி பார்க்கும் பொழுது லாக்கரில் பணம் எதுவும் இல்லை. உடனே ரோகினி தான் மாட்டிக் கூடாது என்று கடையில் வேலை பார்க்கும் ராஜா ராணி மீது பழி போடும் விதமாக அவர்கள் தான் இந்த கடையில் தங்குகிறார்கள் அப்படி என்றால் அவர்கள் தான் எடுத்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்.
அந்த வகையில் மனோஜ் அவர்களை கூப்பிட்டு கேட்கிறார். ஆனால் அவர்கள் நாங்கள் எடுக்கவே இல்லை என்று சத்தியம் பண்ணும் விதமாக சொல்கிறார்கள். பிறகு முத்து சிசிடிவி கேமராவை பார்க்கலாம் என்று சொல்லிய பொழுது மனோஜ் அதை செக் பண்ணுகிறார். எல்லாம் ஆப் இருக்கிறது என்றதும் ரோகிணி பிளான் பண்ணி தான் ராஜா ராணி திருடி இருக்கிறார்கள் என்று சொல்லி அவர்களை திட்ட ஆரம்பிக்கிறார்.
உடனே முத்து போலீசுக்கு போன் பண்ணி தகவலை சொல்லலாம் என்று சொல்லிய பொழுது ரோகினி மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் போலீஸெல்லாம் இடம் தேவையில்லாத பிரச்சினை வரும் என்று சொல்லி முத்துவே அங்கு இருந்து அனுப்பி விடுகிறார்.
ஆனால் பணம் தேவை என்று வந்த மீனாவின் தோழிகளுக்கு முத்து அக்கவுண்டில் இருந்த பணத்தை ட்ரான்ஸ்ஃபர் பண்ணி விடுகிறார். இதனால் யாரை நம்புவது என்று தெரியாமல் மனோஜ் சங்கடத்தில் இருக்கிறார். இதை வைத்து முத்து பிரச்சனை பண்ணி பணம் எப்படி திருடு போச்சு என்று கண்டுபிடித்து விடுவார்.