Memes: கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் கூலி படத்தின் பிரமோஷன் ஜோராக நடந்து வருகிறத. இரண்டு மாதம் முன்பே சன் பிக்சர்ஸ் ஒவ்வொரு அப்டேட் ஆக கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

அதை அடுத்து தற்போது லோகேஷ் முக்கிய சேனல்களுக்கு பேட்டி கொடுத்து ஆர்வத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது.

பூஜா ஆடி இருக்கும் அந்த மோனிகா பாடல் தான் இப்போது சோசியல் மீடியா ட்ரெண்டிங். ஆனால் அதை வைத்து நெட்டிசன்கள் பல மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

அதில் சிவகார்த்திகேயன் தான் லோகேஷை மிரட்டி மோனிகா என்ற பேர வைக்கணும்னு சொல்லி இருக்காரு என சில விஷமிகள் மீம்ஸ் போட்டு வருகின்றனர். நிச்சயம் இவர்கள் தனுஷ் ரசிகர்களாகத்தான் இருக்க வேண்டும் என எஸ் கே ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மற்றொரு பக்கம் நாகார்ஜுனா, அமீர்கான் போன்ற நடிகர்கள் படத்தின் சீக்ரெட்டை உளறி வருகின்றனர். இதனால் லோகேஷ் எனக்குன்னு வருவீங்களா என அப்செட் ஆவது போல் மீம்ஸ் வைரலாகி வருகிறது.

இப்படி சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கும் சில கூலி படம் தொடர்பான மீம்ஸ் தொகுப்பு இதோ.