Lokesh kanagaraj : 2025 இல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று கூலி. இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள நிலையில் இப்போது ப்ரோமோஷன் சூடு பிடித்து விட்டது. கூலி படத்திற்காக லோகேஷ், ஸ்ருதிஹாசன் போன்ற பிரபலங்கள் பிரமோஷனில் இறங்கி உள்ளனர்.
அதில் ரஜினிக்காக அந்த ஒரு விஷயத்தில் மட்டும் லோகேஷ் சமரசம் ஆகவில்லை என்பதை கூறுகிறார். அதாவது 70 வயதை கடந்தும் சினிமாவில் ஹீரோ அந்தஸ்தில் இருப்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் ரஜினி தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்.
அதற்கு முக்கிய காரணம் குடும்ப ரசிகர்கள் தான். பொதுவாகவே அவரது படங்களை பார்க்க பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை குடும்பமாகத்தான் செல்வது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு ஒரு ஃபேமிலி என்டர்டைன்மென்ட் படங்களில் தான் ரஜினி நடிக்க ஆர்வம் காட்டி வருவார்.
ரஜினிக்காக விட்டுக் கொடுக்காத லோகேஷ்
ஆனால் லோகேஷை பொருத்தவரையில் கத்தியும் ரத்தமாக தான் படங்களை எடுத்து வருகிறார். இவ்வாறு உங்கள் படங்களில் அதிகம் வன்முறை காட்சி இருக்கிறது. ரஜினி ரசிகர்களுக்காக உங்களது பாணியை மாற்றி இருக்கிறீர்களா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த லோகேஷ் இதில் எந்த காம்ப்ரமைசும் இல்லை என்று கூறியிருக்கிறார். அதோடு படத்தில் பயங்கரமான வன்முறை காட்சிகள் இடம் பெற்று இருப்பதாகவும் சொல்லி உள்ளார். ஆகையால் ரத்தம் தெறிக்க காட்சிகள் இடம் பெற்றிருக்கும் என்பது இப்போதே தெரியவந்துள்ளது.
ஆகையால் ரஜினியின் ரசிகர்கள் குடும்பத்தோடு இந்த படத்தை எப்படி பார்ப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்னதாக ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வசூலை பெற்றாலும் வன்முறை காட்சிகள் இடம் பெற்றது பேசு பொருளாக மாறி இருந்தது.