kalanithi Maran : கலாநிதி மாறன் சன்டிவி தொலைக்காட்சி நிறுவனத்தின் நிறுவனர். அதுமட்டுமல்லாமல் அரசியல் பிரபலமான முரசொலி மாறனின் மகன். இவர் அரசியல் பின்னணியிலிருந்து வந்தவர். பணக்காரர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.
இவர் தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் படங்களை எல்லாம் தயாரித்து வருகிறார். இவர் தயாரித்து வெளிவர இருக்கும் படம்தான் “கூலி”. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடந்து முடிந்தது.
ரஜினிக்கு ஓவராக ஐஸ் வைக்கும் கலாநிதிமாறன்..
இந்த இசை வெளியீட்டு விழாவில் கலாநிதி மாறன் ரஜினியை ரொம்ப புகழ்ந்து பேசியிருக்கிறார். இது கொஞ்சம் ஓவராதான் தெரிந்திருக்கிறது போல அனைவருக்கும். ரொம்ப ஓவரா ஐஸ் வைக்காதீங்க என்று ஒருசிலர் முணுகிக்கொள்கிறார்களாம்.
அதாவது ரஜினி என்றாலே தனி மரியாதைதான். இப்போ இருக்கும் நடிகர் எல்லாம் ஒன்றிரண்டு படங்களை நடித்து ஹிட் கொடுத்ததும் “போன்” பண்ணா எடுக்கமாட்டேங்குறாங்க? இப்போவே “ஜெட்” கேக்குது என பெயர் சொல்லாமல் சில நடிகர், நடிகைகளை திட்டியுள்ளார் கலாநிதி மாறன்.
ஆனால் இத்தனை படங்கள் நடித்தும் ரஜினி மிகவும் பண்புடன் நடந்துக்கொள்கிறார். எப்போ “போன்” பண்ணாலும் இவரிடம் நாம பேசலாம். ரஜினி சார் “போன்” பண்ணா “CM”, “PM”-னு எல்லாரும் வருவாங்க! இங்க இவர் மட்டும்தான் ஒரே “சூப்பர் ஸ்டார்”. “வேர்ல்ட் லெவல்”-ல உள்ள பிரபலம் கூட இவர் கூட போட்டோ எடுத்துப்பாங்க.
இவர் நெனைச்சா ஒரு “போன்”போட்டு “போஸ்டிங்” கேக்கலாம் ஆனால் அதை இவர் விரும்பல. இந்த வயதிலும் கஷ்டப்பட்டு உழைக்கிறாரு என நிறைய பேசிக்கொண்டே சென்றுள்ளார் கலாநிதிமாறன்,
பொதுவாக இவர் ரஜினியை பற்றி எப்போதுமே உயர்வாகத்தான் பேசுவார். ஆனால் இப்போது ரொம்ப ஓவராக ஐஸ் வைப்பது போல் பேசியுள்ளார் என சிலர் கூறுகிறார்கள். இவர் இப்போது இப்படி பேசுவதற்கு காரணம் கலாநிதி மாறனுக்கும், தயாநிதி மாறனுக்கும் இடையே உள்ள பிரச்சினைகளுக்கு ரஜினி எதுவும் சப்போர்ட் செய்வார் என கலாநிதி மாறன் எதிர்பார்த்து பேசுகிறாரோ? என்று சந்தேகம் கொள்கிறார்களாம், திரை மற்றும் அரசியல் வட்டாரங்கள்.