Indian 3-Rajini: ஷங்கர் கமல் கூட்டணியின் இந்தியன் 2 வெளி வருவதற்கு முன்பே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு ட்ரோல்களை சந்தித்தது.
இதனால் பார்ட் 3 வெளிவருமா என்ற சந்தேகம் இப்போது வரை அனைவருக்கும் இருக்கிறது. ஏனென்றால் இரண்டாம் பாகம் வெளிவருவதற்கே பல வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.
கடைசியில் அது நெகட்டிவ் விமர்சனத்தை பெற்ற நிலையில் அடுத்த பாகம் எப்படி இருக்குமோ என்ற கேள்வி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மூன்றாம் பாகத்தில் கமலுடைய காட்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டது.
இன்னும் சில வேலைகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. ஆனால் அது தொடங்கப்படாத நிலையில் தற்போது பஞ்சாயத்து ரஜினியிடம் வந்திருக்கிறது. தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தலைவரிடம் இது பற்றி கூறியிருக்கிறார்.
ஷங்கர் வீட்டில் நடந்த மீட்டிங்
அவர் மீது சூப்பர் ஸ்டாருக்கு ஒரு மரியாதை இருக்கிறது. அதன் காரணமாகவே ஷங்கர் வீட்டுக்கு நேரில் சென்று அவர் இது குறித்து பேசி இருக்கிறார். ஆனால் இன்னும் 6 கோடி இருந்தால் படத்தை முடித்துக் கொடுத்து விடுவேன் என அவர் சொன்னாராம்.
இன்னும் 6 கோடியா என அதிர்ந்து போன சுபாஷ்கரன் ரஜினியிடம் 1.5 கோடியில் முடிக்க சொல்லுங்க என வேண்டுகோள் வைத்திருக்கிறார். தற்போது இரு தரப்பிடமும் இது குறித்து தலைவர் பேசி வருகிறார்.
விரைவில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவ்வளவு கம்மியான பணத்தில் எப்படி படத்தை முடிப்பது என ஷங்கர் கொஞ்சம் யோசனையில் இருக்கிறாராம்.
ஆனாலும் ரஜினி கேட்டுக் கொண்டதால் படத்தை முடித்து விடுவார் என தெரிகிறது. அப்படி மட்டும் நடந்து படம் ரிலீஸ் ஆகிவிட்டால் அதற்கு காரணம் தலைவராக தான் இருக்க முடியும்.