ரஜினியின் அதிர்ஷ்ட தேவதையாக ஜொலித்த மீனா.. பெயிலியர் ஆன 2 படம் – Cinemapettai

Tamil Cinema News

தென்‑இந்திய சினிமாவில் ரஜினி மற்றும் மீனா என்ற இரு பெரும் நடிகர்களின் சேர்க்கை ரசிகர்கள் கவனத்தை பெற்றது. குறிப்பாக 1990களிலும், 2000களிலும் ரஜினி‑மீனா ஜோடி சில சூப்பர்‑ஹிட் திரைப்படங்களை கொடுத்தது. ஆனால் சில படங்கள் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை.

சிறுவயதில் ரஜினியுடன் நடித்த மீனா

மீனா, அன்புள்ள ரஜினிகாந்த் (1984) என்ற படத்தில் சிறுமியாக “Rosy” என்ற பாத்திரத்தில் நடித்தார். ரஜினி‑வரலாற்றில் அந்த படம் சிறுவயது மீனா கூட பணியாற்றி ரசிகர்களின் மனதில் இடம் பெற்றது. பின்னர், மீனா “En Rasavin Manasile” (1991) மூலம் ஹீரோயின்‑பாத்திரத்தை ஏற்று அறிமுகமானார்.

rajini meena
rajini meena hit photo

மீனா‑ரஜினி இணைந்து கொடுத்த சில வெற்றிப் படங்கள்:

எஜமான்:

இயக்குனர் உதயகுமார் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு ரஜினி மீனா நடிப்பில் எஜமான் திரைப்படம் வெளிவந்தது இப்படம் கிராமத்துக் கதையாகவும் மாஸ் படமாகவும் வெற்றி பெற்றது அந்த வகையில் கிட்டத்தட்ட 175 நாட்கள் திரையரங்குகளில் ஓடி வணிக ரீதியாகவும் விமர்சனத்தியாகவும் வெற்றி பெற்றது. எஜமான் காலடி மண்ணெடுத்து, ஒரு நாளும் உன்னை மறவாத என்ற பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதை வென்றது.

வீரா:

சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு ரஜினி மீனா ரோஜா நடிப்பில் வீரா திரைப்படம் வெளிவந்தது இப்படம் காதல் நகைச்சுவை போன்ற மசாலா படமாக மக்கள் மனதில் இடம் பிடித்தது. இரண்டு மனைவிகளை சமாளிக்கும் விதமாக ரஜினி செய்யும் அட்ராசிட்டி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.

முத்து:

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி மீனா நடிப்பில் முத்து திரைப்படம் வெளிவந்தது. இப்படம் வெள்ளி விழா வெற்றி பெற்றது. எப்பொழுது பார்த்தாலும் இந்த படம் சலிக்கவே செய்யாது. அந்த அளவிற்கு பார்ப்பவர்களுக்கு ஒரு விறுவிறுப்பை ஏற்படுத்தும் படமாக இருக்கிறது.

இப்படி ரஜினியுடன் ஜோடி போட்டு நடித்த மீனாவுக்கு மூன்று படங்களுமே வெற்றி கொடுத்து. ரஜினியின் அதிர்ஷ்ட தேவதையாகவும் ஜொலித்தார். ஆனால் தமிழில் குசேலன் மற்றும் தெலுங்கில் கதாநாயகுடு படத்தில் மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்காததால் இந்த படங்கள் தோல்வியடைந்து விட்டது. இதனைத் தொடர்ந்து அண்ணாத்தே படத்தில் ரஜினியின் மாமன் மகளாக மீனா ஒரு சில காட்சிகளுக்கு மட்டுமே வந்ததாலும் அண்ணாத்தே படம் தோல்வி அடைந்து விட்டது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.