Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இந்திய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நெல்சன் உடன் இணைந்து பண்ணிய ஜெயிலர் படம் பல மடங்கு வசூலை வாரி குவித்தது.
தற்போது கூலி படமும் வசூலில் பெரிய சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஒரு ஐந்து வருடத்திற்கு முந்தைய சினிமா என்பது அந்தந்த மாநிலங்களில் என்ன வசூல் என்பதோடு முடிந்துவிடும்.
கூலிக்கு விழுந்த பெரிய அடி
ஆனால் தற்போது நிலைமையே வேற, வெளிநாட்டு வியாபாரங்கள் வரை கணக்கிடப்படுகிறது. இதுவரை வெளிநாட்டு வியாபாரத்தில் தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் கில்லியாக இருந்த ரஜினிகாந்த்திற்கு இப்போது ஒரு பெரிய நெருக்கடி வந்திருக்கிறது.
கூலி படம் ரிலீஸ் ஆகும் அதே தினத்தில் ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடிக்கும் வார் 2 படமும் ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தின் தயாரிப்பு தரப்பில் இருந்து ஏற்கனவே வெளிநாடுகளில் உள்ள ஐ மேக்ஸ் திரையரங்கத்தின் உடன் பேச்சு வார்த்தைகள் முடிந்து எத்தனை தியேட்டர்கள் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது.
கூலி படத்தின் விநியோகஸ்தர்கள் இதில் காலதாமதம் ஏற்படுத்தியதால் தற்போது கூலி படத்திற்கு திரையரங்குகள் குறைவாக ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் இந்த முறை ரஜினியின் வெளிநாட்டு வசூலில் பெரிய அளவில் அடி விழ வாய்ப்பிருப்பதாக பேச்சுக்கள் இருந்து கொண்டிருக்கிறது. எது எப்படியோ இந்திய அளவில் ரஜினி- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் கூலி சம்பவம் பண்ணப்போவது உறுதி.