Rajini : ரஜினி தற்போது 70 வயதை கடந்தாலும் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார். கதையின் நாயகனாக தற்போது வரை பயணித்து வரும் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த சூழலிலும் எல்லா காலகட்டத்திலும் ரஜினியின் எதிர்பார்ப்புள்ள மூன்று படங்கள் உள்ளது.
அதில் முதலாவதாக கூலி படம் தான். இந்த படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் லோகேஷ் மற்றும் ரஜினி இருவரும் முதல்முறையாக இணைந்து இருக்கிறார்கள்.
அதோடு ஏகப்பட்ட திரைபட்டாளமே இணைந்திருக்கிறார்கள். கூலி படத்திற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருப்பது 2.0 படம் தான். இது ரஜினியின் கேரியரில் அதிக வசூல் செய்த படமாக இருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாகவும் பெரிய பங்களிப்பை கொடுத்திருந்தது.
ரஜினியின் டாப் லிஸ்டில் இருக்கும் மூன்று படங்கள்
இதைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ஜெயிலர் படம் இருக்கிறது. தொடர்ந்து ரஜினி தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில் அவரை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது ஜெயிலர் படம் தான். இதற்கு முந்தைய படமான அண்ணாத்த தோல்வியை தழுவியது.
மேலும் நெல்சன் டைரக்ஷனில் வெளியான பீஸ்ட் படமும் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த சூழலில் ரஜினியின் படத்தை நெல்சன் இயக்குவதால் அப்போது மிகப்பெரிய கேலி கிண்டலுக்கு உள்ளானது. ஆனால் அவற்றையெல்லாம் தவிடு பொடி ஆக்கி இருந்தார் நெல்சன்.
அதுமட்டுமா இப்போது ஜெயிலர் 2 படமும் உருவாகி வருகிறது. ஆகையால் வரும் காலங்களில் ரஜினியின் டாப் லிஸ்டில் இந்த படமும் இடம்பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் இப்போது கூலி படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.