FahadFassil : தற்போது மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளின் பிரபல நடிகரின் டாப் லிஸ்டில் இருக்கிறார் ஃபஹத்ஃபாசில். முதலில் நஸ்ரியாவின் கணவர் என்று அறியப்பட்டவர் பின்பு சினிமாவில் தனக்கென்று ஒரு பிம்பத்தை உருவாக்கினார்.
2002ல் திரையுலகில் கால் பதித்தார். அப்போது அவருக்கு கிடைத்த எந்த திரைப்படமும் பெரிதான ஹிட் இல்லை. பின் பல வருடங்களுக்குப் பிறகு, தொடர்ந்து நடித்த திரைப்படங்கள் மூலம் கேரளா மக்கள் மனதில் இடம் பிடித்தார். 2022-ல் விக்ரம் திரைப்படத்தில் அமர் என்ற வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
வேட்டையன் படத்தில் இப்படியா..
இந்நிலையில் ஃபஹத்ஃபாசில் பேட்டி ஒன்றில் வேட்டையன் திரைப்படத்தை பற்றி கூறியிருப்பது யோசிக்க கூடிய விஷயமாக உள்ளது. ” முதலில் ரஜினியின் வேட்டை திரைப்படத்தில் வேறு ஒரு கதாபாத்திரத்திற்கு தான் அணுகினார்கள்.
ஆனால் அதற்கு பதிலாக நான் பேட்டரி கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வாகினேன். ஞானவேல் எனக்காக அந்த திரைப்படத்தில் பல காட்சிகளை அமைத்துக் கொடுத்தார்-பேட்டியில் ஃபஹத்ஃபாசில் “. ஃபஹத்ஃபாசில் தற்போது சினிமா மட்டுமில்லாமல் வலைதளத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
சாதாரண கதாபாத்திரமாக தான் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இயக்குனர் ஞானவேல், ஃபஹத்ஃபாசிலுக்கு ஒரு சக்தி வாய்ந்த அரசியல் மற்றும் நுணுக்கமான கதாபாத்திரத்தை தான் வேட்டையன் திரைப்படத்தில் அவருக்கு கொடுத்தார்.
ஒரு மலையாள நடிகர் மலையாள திரைப்படத்தில் மட்டும் தனது நோக்கத்தை செலுத்தாமல் தமிழில் பல திரைப்படங்களிலும் கால் பதித்து வருவது தான் பெரிய விஷயம். இது மட்டும் இல்லாமல் தனக்கென்று தமிழ் ரசிகர்களையும் சேர்த்திருக்கிறார்.