Rajini : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் சினிமா வாழ்க்கை என்பது ஒரு மிகப்பெரிய பயணமாகவும். இதில் இவருக்கு தெரியாத சூட்சமங்கள் ஏதும் கிடையாது. பிசிறு தட்டாமல் நடிக்க கூடிய சிறந்த நடிகர்.
இவர் சினிமாத்துறையில் நடித்தால் அதிக அளவில் டேக் போகாதாம் உடனே புரிந்து கொண்டு செய்து விடுவாராம். வசனமாக இருந்தாலும் சரி உடனே முடித்துவிடுவாராம் . ஆனால் இவருக்கு பிடிக்காத விஷயம் ஒன்று உள்ளதாம்.
அதாவது இவர் டப்பிங் பேசும் போது அந்த அறைக்குள் இயக்குனர்கள் மட்டுமல்லம்ல யாரும் வரக்கூடாதாம், அப்படி வந்தால் டப்பிங் பேசமாட்டேன் எண்டு கூறிவிடுவாராம் ரஜினிகாந்த்.
இவ்வாறு ரஜினிகாந்த அவர்கள் இருக்கையில் பா ரஞ்சித் அவர்கள் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் “கபாலி” பட ஷூட்டிங் பற்றி சில ஸ்வார்ஷ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது கபாலி பட ஷூட்டிங் அப்போ ரஜினிகாந்த் அவர்கள் டப்பிங் பேசிவிட்டு சென்று விட்டாராம்.
ரஜினியை கொடுமைப்படுத்திய இயக்குனர்..
அந்த டப்பிங் கொஞ்சம் சரியாக வரவில்லையாம். இதனை எப்படி சரிசெய்வது என்று யோசித்த பா ரஞ்சித் அவர்கள் “நெருப்புடா நெருங்குடா” என்ற பாட்டை போட்டு காமிப்பதற்காக ரஜினிகாந்த் அவர்களிடம் சென்று அந்த பாடலை காமித்து ஓகே செய்தாராம். இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் நான் டப்பிங் அறைக்குள் வரலாமா என்று கேட்டாராம்.
அதற்கு ரஜினிகாந்த் “தளபதி” படத்தில் மணிரத்தினம் மட்டுமே டப்பிங் பேசும்போது இருந்தார். அதற்கு பிறகு நான் யாரையுமே அனுமதிப்பதில்லை என்று கூறிவிட்டு, சரி வாருங்கள் என அழைத்தாராம். பிறகு முதல் நாள் பேசியதை திரும்ப பேசமாட்டேன் என்றும் கூறினாராம்.
டப்பிங்லாம் முடிந்ததற்கு அப்புறம், ரஜினிகாந்த் சாரிடம், சார் அந்த முதல் நாள் டப்பிங் திரும்ப பேசிக்காமிங்க சார் என்று கேட்டேன். அதற்கு ரஜினி சார் ” நீங்க சரியான ஆளுதான் ” என சிரித்து கொண்டே கூறிவிட்டு பேசி கொடுத்தார்.
பிறகு என்ன கொடுமை படுத்தின டைரக்டர் இரண்டு பேர்தான். இப்போ மூன்றாவது நீங்களும் சேர்ந்துடீங்க என ஜாலியாக கூறினாராம் ரஜினிகாந்த். இவ்வாறு பா ரஞ்சித் அந்த தருணத்தை மிஸ் பண்ணுறேன் என கூறியுள்ளார்.