Cinema : வயசானாலும் கெத்து குறையாமல் ரஜினிகாந்த் இன்னும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். மசு குறையாமல் இன்னும் இளம் தலைமுறையினரை ரசிக்க வைக்கும் ஸ்டைல், நடனம் இதெல்லாம் தான் சூப்பர் ஸ்டாரை ரசிக்க வைக்கிறது.
தற்போது வலைத்தளத்தை திறந்தாலே ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தின் அப்டேட் தான் வந்து கொண்டே இருக்கிறது. தற்போது வலைத்தளத்தில் தலைவர் தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கம் இன் திரைப்படம் கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. அனிருத் இசை சொல்லவே வேண்டாம் பயங்கரமான வரவேற்பு தான்.
புது அப்டேட்..
இந்த திரைப்படத்தில் வரும் மோனிகா பாடல் தான் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ள பாடல். சூர்யாவுடன் ரோலக்ஸ் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே குடும்ப குத்துவிளக்கு கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு தற்போது கூலியில் மோனிகா பாடலுக்கு குத்தாட்டம் போட்டது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
ஆகஸ்ட் 14 கூலி திரைப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் எட்டு வாரங்கள் தெரியப்பட இருக்கிறது. அதற்குப் பிறகு பல கோடி கணக்கில் பிரைம் ஓடிடி வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
ரஜினியை மிஞ்சிய படம்..
காந்தாரா : இத்திரைப்படம் 2022-ல் வெளியாகி பான் இந்தியா திரைப்படமாக உருவெடுத்தது. இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கொடுத்த நிலையில், தற்போது அந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் தயாராகி வருகிறது.
ஒரு பிரம்மாண்டமான கடவுள் வரலாற்று உணர்வின் முன்பதிவாக உள்ளது. காட்டின் நடுவில், மண்ணின் வாசனை கலந்தவாறு, ரிஷப் ஷெட்டி ஒரு முழுமையான மாற்றமடைந்த அவதாரத்தில் ஜொலிக்கிறார். கூலிக்கு பின் தற்போது பான் இந்தியா திரைப்படமான காந்தாரா நிச்சயம் 1000 கோடி வசூல் செய்யும் என் எதிர் பார்க்கப்படுகிறது. ரஜினி என்ன ரஜினி இந்தப் படத்துக்கு முன்னாடியே அவரோட கூலி படம் பக்கத்தில் நிற்க முடியாது என்ற கருத்துக்கள் வலைத்தளங்களில் பறந்து வருகிறது.