Rajini: நக்கலுக்கு பெயர் போனவர் தான் கவுண்டமணி. சாதாரணமாக அவர் பேசினாலே அதில் கேலியும் கிண்டலும் நிறைந்திருக்கும். எதிர்பக்கம் உள்ளவர்கள் வாயடைத்து போவார்கள்.
அதேபோல் எல்லோரையும் வாயா போயா என பேசும் பழக்கம் கொண்டவர். கமல் ரஜினி கூட இதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதேபோல் எல்லாத்தையும் ஓப்பன் ஆக பேசி விடுவார்.
அப்படித்தான் எஜமான் படத்தில் நடிக்கும் போது ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அந்த படத்தில் நடிப்பதற்காக கவுண்டமணி 30 நாளைக்கு 30 லட்சம் சம்பளம் கேட்டிருக்கிறார். அந்த படத்திற்கு முன்பு தான் இயக்குனரும் தயாரிப்பாளருமான வி சேகர் படத்தில் நடிப்பதற்காக 5 லட்சம் வாங்கியிருக்கிறார்.
ரஜினிய எனக்கு பொட்டி தூக்க சொல்லுங்க
ஆனால் ஏவிஎம் சரவணனிடம் 30 லட்சம் கேட்டது அவரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. உடனே அவர் வி சேகருக்கு போன் போட்டு நீ எவ்வளவு கொடுத்த என விவரத்தை கேட்டு வாங்கி இருக்கிறார்.
பிறகு கவுண்டமணியிடம் அந்த படத்துல அஞ்சு லட்சம் வாங்கிட்டு எனக்கு மட்டும் 30 லட்சமா என கேட்டாராம். உடனே நக்கல் மன்னன் அந்த படத்துல நான் மெயின் கேரக்டர்ல நடிச்சேன். ஆனா இந்த படத்துல ரஜினி தானே ஹீரோ.
நான் அவருக்கு பொட்டி தூக்குற கேரக்டர். வேணும்னா என்ன ஹீரோவா போட்டு ரஜினிய எனக்கு பொட்டி தூக்க சொல்லுங்க. நான் அஞ்சு லட்சம் வாங்கிக்கிறேன் என சொல்லி இருக்கிறார். இதனால் தயாரிப்பாளர் வாயடைத்து போய்விட்டாராம்.
உடனே கேட்ட சம்பளத்தை கொடுத்து படத்தை முடித்து இருக்கிறார். இப்படி கவுண்டமணி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என பேசக்கூடியவர். அதேபோல் அந்த காலகட்டத்திலேயே அவர் அதிகபட்ச சம்பளம் வாங்கி நடித்ததும் குறிப்பிடத்தக்கது.