Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினி என்றாலே தமிழ் திரைப்படம் மிகப்பெரிய மரியாதை உண்டு. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி காலத்தில் நடித்த சமகால நடிகர்கள் அனைவரும் நல்ல முறையில் நட்பு பாராட்டி கொண்டிருக்கின்றனர். என்னதான் ரஜினி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும், முந்தைய காலத்தில் தன்னுடைய நடித்த நடிகர்கள் அனைவருடனும் நன்றாக பழக்கவழக்கத்தில் இருந்து வருகிறார்.
அந்த வகையில் நடிகர் விஜயகுமார் அவர்களின் பேரனும் வனிதா விஜயகுமார் அவர்களின் மகனுமான விஜய் ஸ்ரீ ஹரி நடிக்கவிருக்கும் படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கதை கேட்டு முடிவு பண்ணியதாக கூறி வருகின்றனர்.அதாவது நடிகர் விஜயகுமார் அவர்கள் கதை சொல்ல வந்த இயக்குனர்களை ரஜினியிடம் கதை சொல்லுங்கள் அவர் ஓகே சொல்லனுடன் நான் சம்மதிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ரஜினி ஓகே சொன்ன கதை..
இதனால் அந்த படம் இயக்குனர்கள் நடிகர் ரஜினிகாந்த் அவர்களிடம் சென்று வனிதா விஜய் குமாரின் மகன் விஜய் ஸ்ரீஹரி நடிக்க இருக்கும் படத்திற்கான கதையை கூறினார்களாம். ரஜினிகாந்த் அவர்கள் கேட்டுவிட்டு கதை ஓகே என்று சொன்னவுடன் நடிகர் விஜயகுமார் அவர்கள் தன் பேரனை அந்த படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
இந்த பட பிரமோஷன் விஜயகுமார் அவர்கள் ரஜினி அவர்களை பற்றி பெருமையாக கூறியிருக்கிறார். இந்த செய்தி வனிதா விஜயகுமார் அவர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. ஏறகனவே வனிதா விஜயகுமார் மற்றும் விஜயகுமார் குடுப்பதிற்கு இருக்கும் தகராறில் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை கிடையாது. வனிதா விஜயகுமார் அவர்களின் மகன் விஜய் ஸ்ரீஹரி தாத்தா விஜயகுமார் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார்.
ஆகவே தன் மகன் நடிக்கவிருக்கும் படத்தின் ரஜினி அங்கிள் கேட்டு ஓகே செய்த்துள்ளார் என்ற செய்தி வனிதாவிற்கு பெரும் சந்தோஷத்தில் ஆழ்த்துயுள்ளது. இதனால் ரஜினி அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்த பொது வனிதா விஜயகுமார் இந்த விஷயத்தை பற்றி ரஜினியுடன் கேட்டுள்ளார்.
அதற்க்கு ரஜினி வனிதா மகன் அல்லவா, நான் கேட்காமல் பிறகு யார் கதை கேட்டு ஓகே சொல்வது என கூறியுள்ளாராம். இதை கேட்டவுடன் வனிதாவிற்கு தலைகால் புரியவில்லை. இவ்வாறாக தற்போது நடந்த ஒரு நேர்காணலில் வனிதா விஜய்குமார் ரஜினி அங்கிள் பற்றி மனம் திறந்து கூறியுள்ளார்.