Rajini-Kamal: ரஜினி, கமல் இருவரும் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நட்பு இப்போது வரை கொஞ்சம் கூட குறையவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
இத்தனைக்கும் சினிமாவை பொறுத்தவரையில் இவர்கள் இருவருக்கிடையே தான் கடுமையான போட்டி இருக்கிறது. அதேபோல் இரு தரப்பு ரசிகர்களுக்கும் கூட ஒரு பனிப்போர் இருந்து கொண்டே இருக்கிறது.
ஆனால் இதையெல்லாம் தாண்டி அவர்களுடைய நட்பு இருக்கிறது. இருவருமே ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து பேச மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசை.
பாலச்சந்தர் இடத்தை பிடித்த தலைவர்
இது ஒரு பக்கம் இருக்க நேற்று கமல் ரஜினியை சந்தித்த போட்டோவை பகிர்ந்திருந்தார். ராஜ்யசபா எம்பி ஆகி இருக்கும் அவர் இந்த சந்தோஷத்தை தன் நண்பரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அந்த போட்டோக்கள் வெளிவந்த நிலையில் இன்னொரு செய்தியும் கசிந்துள்ளது. அதாவது கமல் தன்னுடைய வாழ்க்கையில் எது நடந்தாலும் பகிர்ந்து கொள்ளும் முதல் ஆள் அவருடைய குரு பாலச்சந்தர் தான்.
அதற்கு அடுத்த நிலையில் ரஜினி இருக்கிறார். சோகமாக இருந்தாலும் சந்தோஷமாக இருந்தாலும் கூட கமல் அதை இந்த இருவரிடம் தான் பகிர்ந்து கொள்வார். தற்போது பாலச்சந்தர் இல்லாத நிலையில் எம்பி ஆனவுடன் முதல் வேலையாக நண்பரை பார்க்க வந்துவிட்டார்.
இது பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது. தற்போது வெளிப்படையாகவே சில நடிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர். அவர்களுக்கு மத்தியில் ரஜினி, கமல் என்ற இரு லெஜென்ட்களின் நட்பு ஆச்சரியப்படுத்துகிறது.