Rajinikanth: ரஜினிகாந்த் மாற வேண்டும், இல்லையென்றால் விரைவில் சந்தி சிரிக்க வைக்கப்படுவார். பல மீடியாக்கள் முன்னிலையில் வேலு பிரபாகரன் சொன்ன வார்த்தை இது. அதே வேலு பிரபாகரன் எனக்கு ரஜினியை புரிந்து கொள்ள நேரம் அதிகமாக எடுத்துக் கொண்டது.
அவரை போல ஒரு ஜென்டில்மேன் பார்க்க முடியாது என அதே மீடியா முன்பு சொல்லி இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் கலந்து கொண்ட ஒரு மேடையில் பெரியாரை தவறாக பேசிவிட்டார் என சித்தரிக்கப்பட்டது.
மேலும் பெரியார் ஆதரவாளர்கள் ரஜினிக்கு எதிராக பல கண்டனங்களை தெரிவித்தார்கள். இதில் அறிக்கை மேல் அறிக்கை விட்டு ரஜினியை ரொம்ப புண்படுத்தியது வேலு பிரபாகரன் தான். இப்படிப்பட்ட நிலையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி மற்றும் வேலு பிரபாகரன் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
அப்போது வேலு பிரபாகரனிடம் என்ன வேலு பெரியார் பற்றி ஒரு படம் எடுத்தீங்களே என்ன ஆனது என்று கேட்டிருக்கிறார். அதற்கு வேலு பிரபாகரன் பண பிரச்சனையால் ரிலீஸ் பண்ண முடியவில்லை சார் என்று சொல்லி இருக்கிறார்.
அதற்கு ரஜினி நான் ஏதாவது உங்களுக்கு உதவி செய்யவா என்று கேட்டிருக்கிறார். உடனே வேலு பிரபாகரன் சார் அந்த லேபுக்கு போன் பண்ணி படத்தை ரிலீஸ் பண்ண அனுமதி கொடுங்க, படம் ரிலீஸ் ஆனதும் வேலு பிரபாகரன் காசு கொடுத்து விடுவார் என்று மட்டும் சொல்லுங்களேன் என்று சொல்லி இருக்கிறார்.
அதற்கு ரஜினி அதெல்லாம் எதற்கு என கேட்டு எவ்வளவு பணம் வேண்டும் என்பதை அறிந்து கொண்டு அதை வேலு பிரபாகரன் கையில் கொடுத்திருக்கிறார். தன்னை பெரியார் ஆதரவாளர்களாக காட்டிக் கொண்டவர்கள் கூட இந்த படத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லையாம்.
வீட்டு பத்திரத்தின் மேல் 3 லட்சம் கடன் வாங்கி அந்த வீடு கடலில் மூழ்கி விட்டதாம். அப்படி இருக்கும் போது யார் பெரியாரை தவறாக பேசினார் என்று நான் அறிக்கை மேல் அறிக்கை விட்டு கொண்டிருந்தேனோ அவர்தான் எனக்கு உதவி செய்தார். எனக்கு பெரியார் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை, அதே நேரத்தில் ரஜினியை புரிந்து கொள்ளத்தான் எனக்கு நேரம் தேவைப்பட்டது என பேசி இருக்கிறார்.