Dhanush : நடிகர் தனுஷ் அவர்கள் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய்,அஜித் இவர்களுக்கு அடுத்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர். இவர் மிகவும் கடினமான பாதைகளை கடந்து தான் சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார்.
இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனக்கென ரசிகர்களை சேர்த்து கொண்டே செல்கிறார். தமிழ்நாட்டில் இவருக்கென தனி ரசிகர்கள் இருப்பதை எவ்வாறு இவர் பயன்படுத்தி கொள்ளப்போகிறார் என்பதே கேள்வி.
தனுஷ் வரும் பிறந்தநாள் அன்றிலிருந்து ஒவ்வொரு வாரமும் 500 ரசிகர்களை நேரில் சந்திக்க உள்ளாராம். அவர் எதற்கு இவ்வாறு ரசிகரங்களை சந்திக்க வேண்டும். இதில் ஏதும் ரகசியம் திட்டம் உள்ளதா என முணுமுணுத்து கொள்கிறார்களாம்.
ரஜினி, விஜய் மாதிரி அரசியல் Entry-ல் அடுத்த அசுரன்..
ஒருவேளை ரஜினி, விஜய் போல இவருக்கும் அரசியல் ஆசை இருக்கிறதோ என்னவோ என்ற சந்தேகம் பெருமளவில் பேசப்படுகிறது. இல்லை தனுஷ் ரகசிய திட்டம் வைத்துள்ளார் போல அரசியலில் பங்கேற்க போகிறார் போல எனவும் பேசிக்கொள்கின்றனவாம்.
ஆனால் தற்போதெல்லாம் தனுஷ் அவர்கள் விஜய்க்கு ஆதரவாக பேசிவருகிறார், மறைமுகமாக விஜய்க்கு ஓட்டு சேர்க்க போகிறாரா? அல்லது ரஜினியுடன் இணைந்து எதுவும் திட்டம் வைத்துள்ளார்களா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.
ஆனால் திடீரென்று தனுஷ் அவர்கள் இந்த திட்டம் தீட்டியிருப்பது கொஞ்சம் சந்தேகத்திற்கு உரியதாக இருக்கிறது. விஜய் சினிமாவை விட்டு போய்விட்டார் நாம் ரசிகர் மன்றம் மூலமாக தமிழ்நாட்டு மக்ளுக்குக் ஒரு சில உதவிகளை செய்து ரசிகர்களை பெருக்கி கொள்ளலாம், பிறகு அரசியலுக்கு வரலாம் என இதையெல்லாம் செய்கிறார் என சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்களாம்.