Bigg Boss 9: விஜய் டிவியில் பிரபலமான ஷோவாகவும், ரசிகர்களை கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாகவும் பிக் பாஸ் வெற்றி பெற்று இருக்கிறது. அதனால் தான் தொடர்ந்து 8 சீசன்களை வெற்றிகரமாக முடித்து தற்போது ஒன்பதாவது சீசனுக்கு தயாராக இருக்கிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் ஐந்தாம் தேதி பிக் பாஸ் சீசன் ஆரவாரத்துடன் துவங்கப் போகிறது.
இதில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் பாதி பரிச்சயமானவர்களும் மீதமுள்ள பேர் புதுசாக கூட்டிட்டு வருவார்கள். இதில் யார் மக்களை அதிக அளவில் கவர்கிறார்களோ அவர்களே டின்னராக வெற்றி பெற்று டைட்டில் பெறுவார்கள்.
அந்த வகையில் முக்கால்வாசி விஜய் டிவியில் சீரியல் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படி பார்க்கும் பொழுது இந்த சீசனில் யாரெல்லாம் பங்கேற்க போகிறார்கள் என்ற தகவல் வந்திருக்கிறது. இதன் அடிப்படையில் செம்பருத்தி மூலம் பிரபலமான நடிகை ஷபானா பங்கேற்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இவர் தற்போது குக் வித்து கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று விஜய் டிவி ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார். இனி இவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்க்கலாம். அடுத்ததாக வினோத் பாபு, ஃபரீனா, உமைர் கலந்து கொள்ளப் போகிறார்கள். இவர்களைத் தொடர்ந்து விஜய் டிவியின் மூலம் பிரபலமான தூங்குமூஞ்சி அஸ்வினும் பங்கேற்க போகிறார்.
இவருக்கு ஏற்கனவே குக்குவித்து கோமாளி சீசன் மூலம் ரசிகர்கள் அதிக அளவில் கிடைத்தார்கள். அத்துடன் ஒரு சில படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் சில சர்ச்சையில் சிக்கி அடுத்து பட வாய்ப்பு இல்லாமல் துவண்டு போய்விட்டார். இவரை மறுபடியும் கை தூக்கி விடும் விதமாக விஜய் டிவி கொடுத்த வாய்ப்பு தான் பிக் பாஸ் சீசன் 9. அதனால் இதில் கலந்துகொண்டு நிச்சயம் இவருக்கான இடத்தை சினிமாவில் தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.