Hansika motwani : ஹன்சிகா மோத்வானி தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். ஒரு சாயலில் குஷ்பூ போல் எண்ட்ரி கொடுத்ததால் அவருக்கு எக்கச்சக்க பட வாய்ப்புகள் குவிந்தது.
இந்த சூழலில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் பிரம்மாண்டமாக ஹன்சிகாவின் திருமணம் நடைபெற்றது. அதாவது சோஹேல் கதூரியாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. ஆனால் அப்போது ஹன்சிகாவை பற்றி ஒரு சர்ச்சையும் சுற்றியது. அதாவது தன்னுடைய தோழியின் முன்னால் கணவரை ஹன்சிகா திருமணம் செய்து கொண்டார். ஆகையால் தோழியை ஏமாற்றிவிட்டார் என்று விமர்சனங்கள் வந்தது.
கணவரை பிரிந்த வாழும் ஹன்சிகா
இந்த சூழலில் திருமணமான சில மாதங்களிலேயே ஹன்சிகா மற்றும் சோஹேல் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசிக்கவில்லையாம்.
ஹன்சிகா தனது அம்மாவுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்னும் வெளியாகவில்லை. ஆகையால் இது வதந்தியாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு ஹன்சிகா சினிமாவில் அதிகமாக தலைகாட்டாமல் இருக்கிறார்.
ஆகையால் அவரது சொந்த விஷயங்கள் எதுவும் வெளியில் வராமல் இருக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் ஹன்சிகா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக வரும் செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.