Rajamouli : பாகுபலி புகழ் இயக்குனர் ராஜமௌலி பிரம்மாண்ட படங்களை எடுக்கக்கூடியவர். தமிழில் எவ்வாறு ஷங்கரோ அதே போல் தான் தெலுங்கு சினிமாவில் ராஜமவுலி கொடி கட்டி பறந்து வருகிறார். அவருடைய பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
தமிழில் அவர் இயக்கிய நான் ஈ படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் கடைசியாக ஆர்ஆர்ஆர் என்ற பிரம்மாண்ட படத்தையும் இயக்கி வெற்றிகண்டார். இந்த சூழலில் சமீபத்தில் தமிழில் ராஜமவுலி தனது கற்பனையில் இருக்கும் ஆசையை கூறியிருக்கிறார்.
அதாவது தமிழில் படம் எடுக்க வேண்டும் என்றால் ரஜினி மற்றும் கமல் ஆகியோரை வைத்து படம் எடுக்க வேண்டுமாம். அதுவும் இருவரும் மோதிக் கொள்ளும் அளவுக்கு ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் வைத்து படம் எடுக்க வேண்டும் என்பது தனது ஆசை என்று கூறியிருக்கிறார்.
ராஜாமௌலிக்கு இருக்கும் ஆசை
இந்த எண்ணம் மட்டும் இருக்கும் நிலையில் இதுவரை ஸ்கிரிப்ட் எதுவும் செய்யவில்லை என்று ராஜமௌலி கூறியிருக்கிறார். கமல் மற்றும் ரஜினி இருவருமே தற்போது வரை நட்பு பாராட்டி வருகிறார்கள். இருவரும் ஒரே படத்தில் நடிக்க வேண்டும் என்பது எல்லோரின் ஆசையாக இருக்கிறது.
அதோடு ஹீரோ, வில்லன் கான்செப்ட் என்றால் படு பயங்கரமாக இருக்கும். ராஜமௌலி எப்படியும் இந்த படத்தை விரைவில் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் அவரது கனவு படம் தான் ராமாயணம்.
அந்தப் படத்தில் கூட ராமன், ராவணன் கதாபாத்திரத்தில் கமல், ரஜினியை நடிக்க வைக்கலாம் என்றும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். மேலும் ராஜமௌலியின் இந்த ஆசை நிறைவேறுகிறதா என்று காலம் தான் பதில் சொல்லும்.