Vishnu Vishal : வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் விஷ்ணு விஷால். அதன் பிறகு குள்ளநரி கூட்டம், நீர் பறவை, இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி போன்ற பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். ஆனால் விஷ்ணு விஷால் என்றாலே சட்டு என்று ஞாபகம் வருவது ராட்சசன் படம் தான்.
ஆனால் தனக்கு அடையாளம் கொடுத்தது வேறு இரண்டு படங்கள் என்று கூறி இருக்கிறார் விஷ்ணு விஷால். அதாவது தன்னை ஒரு நல்ல நடிகர் என்று ரசிகர்கள் ஏற்றுக் கொண்டாலும் இந்த இண்டஸ்ட்ரி ஏற்றுக்கொள்ளவில்லை. ஒவ்வொரு வருடமும் டாப் 20 படங்களில் தன்னுடைய படங்கள் இடம்பெறும்.
ஆனாலும் தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் நான் ஒரு இயக்குனரின் மகன் என்பதுதான். இது தனக்கு மிகவும் வருத்தமாக இருந்ததாகவும் விஷ்ணு விஷால் கூறியிருக்கிறார். மேலும் எஃப்ஐஆர் மற்றும் கட்டா குஸ்தி படங்கள் நடித்த போதுதான் சினிமா தன்னை ஏற்றுக்கொண்டது.
ராட்சசனை விட அடையாளம் கொடுத்த 2 படங்கள்
இத்தனை வருடங்கள் பயணித்து பிறகு இப்போது தான் தனக்கு அங்கீகாரம் கிடைத்ததாக கூறியிருக்கிறார். மேலும் விஷ்ணு விஷால் கடைசியாக ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படம் பெரிதாக போகவில்லை. இப்போது தயாரிப்பாளராக ஹோ எந்தன் பேபி படத்தை எடுத்துள்ளார். வருகின்ற ஜூலை 11ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. மேலும் மீண்டும் ராம்குமார் உடன் விஷ்ணு விஷால் இணைய இருக்கிறார்.
ஆகையால் இந்த படம் ராட்சசன் 2 படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஷ்ணு விஷால் தொடர்ந்து நல்ல படங்களை கொடுப்பார் என அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.