ராட்சசன் படத்தை மிஞ்சியதா விஜய் ஆண்டனியின் மார்கன்.? ட்விட்டர் விமர்சனம் – Cinemapettai

Tamil Cinema News

Maargan Movie Twitter Review: விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் மிகப்பெரிய அளவில் வெற்றி படம் எதுவும் அவருக்கு அமையவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

ராட்சசன் படத்தை மிஞ்சியதா விஜய் ஆண்டனியின் மார்கன் ட்விட்டர் விமர்சனம் Cinemapettai.webp

அப்படி அவர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் தான் மார்கன். இன்வெஸ்டிகேஷன் க்ரைம் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது என ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

1751015938 445 ராட்சசன் படத்தை மிஞ்சியதா விஜய் ஆண்டனியின் மார்கன் ட்விட்டர் விமர்சனம் Cinemapettai.webp

அதில் படம் தொடங்கியதுமே கதை ஆரம்பித்து விடுகிறது. தேவையில்லாத எந்த காட்சிகளும் கிடையாது. நல்ல சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் கதை களம் என பாராட்டி இருக்கின்றனர்.

மார்கன் ட்விட்டர் விமர்சனம்

பொதுவாக விஜய் ஆண்டனி இந்த மாதிரி படங்களை அதிகம் தேர்ந்தெடுக்கிறார். அதிலும் இந்த படத்தில் அவருடைய நடிப்பு நன்றாக இருக்கிறது. அதேபோல் கதை விறுவிறுப்பாக நகர்வதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

1751015938 570 ராட்சசன் படத்தை மிஞ்சியதா விஜய் ஆண்டனியின் மார்கன் ட்விட்டர் விமர்சனம் Cinemapettai.webp

மேலும் கிளைமேக்ஸ் எதிர்பாராத திருப்பங்களை தந்துள்ளது. அதேபோல் படம் முழுவதும் அந்த சஸ்பென்ஸ் தொடர்கிறது. அதுவே ரசிகர்களை கதையோடு பயணிக்க வைக்கிறது.

1751015938 805 ராட்சசன் படத்தை மிஞ்சியதா விஜய் ஆண்டனியின் மார்கன் ட்விட்டர் விமர்சனம் Cinemapettai.webp

ஆக மொத்தம் இயக்குனர் லியோ ஜான்பால் திரில்லர் விரும்பிகளுக்கு பிடித்த மாதிரியான ஒரு கதையை கொடுத்துள்ளார். நிச்சயம் படம் பார்க்கும் ரகம் தான் என விமர்சகர்களும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

1751015938 531 ராட்சசன் படத்தை மிஞ்சியதா விஜய் ஆண்டனியின் மார்கன் ட்விட்டர் விமர்சனம் Cinemapettai.webp

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.