Vishnu Vishal : விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கவனம் பெற்றார். திறமையான நடிகராக இருந்தாலும் அவரது வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்ததாக கூறியிருக்கிறார். திரில்லர் படமாக வெளியான ராட்சசன் படம் மிகப்பெரிய வெற்றி கொடுத்தது.
ஆனால் அதன் பிறகு விஷ்ணு விஷால் மிகப்பெரிய சோதனை சந்தித்திருக்கிறார். அதாவது விஷ்ணு விஷால் அடுத்தடுத்து 9 படங்களில் கமிட்டான நிலையில் எல்லாமே பாதியிலேயே டிராப் ஆகிவிட்டது. குறிப்பாக யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க இருந்தார்.
அந்தப் படமும் ஏதோ ஒரு காரணத்தால் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து விக்ராந்துடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக இருந்ததாம். இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் நாமே தயாரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாராம்.
விஷ்ணு விஷால் தயாரிப்பு நிறுவனம் தொடங்க காரணம்
ஆகையால் தனது சொந்த தயாரிப்பில் அடுத்த படத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார். ஆகையால் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அதில் தன்னுடைய முதல் படமாக எஃப் ஐ ஆர் படத்தை எடுத்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் தயாரிப்பில் வெளியான மற்றொரு படம் தான் கட்டா குஸ்தி. இதுவும் வெற்றியை கொடுக்க தொடர்ந்து தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஓஹோ எந்தன் பேபி என்ற படத்தை விஷ்ணு விஷால் தயாரித்திருந்தார்.
தொடர்ந்து அவரது தயாரிப்பின் நிறைய படங்கள் வர இருப்பதாகவும் விஷ்ணு விஷால் கூறியிருக்கிறார். சோதனையில் இருந்து தான் வழி பிறக்கும் என்பது போல தொடர்ந்து பட வாய்ப்பு தட்டி போக இப்போது தயாரிப்பு நிறுவனம் தொடங்கி கல்லா கட்டி வருகிறார் விஷ்ணு விஷால்.