Rashmika mandanna : அனுஷ்காவுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் என்றால் பாகுபலி தான். சினிமாவில் உச்சியில் இருந்த நிலையில் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகமாக கூட்டினார். மீண்டும் அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டு இருந்தார்.
இதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் இல்லாமல் போனது. இப்போது மீண்டும் முழுவதுமாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் உருவாகி வருகிறது காதி படம். இதை க்ரிஷ் ஜாகர்லமுடி இயக்கி வருகிறார்.
இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதே நாளில் ராஷ்மிகாவின் தி கேர்ள் ஃப்ரெண்ட் படமும் வெளியாகிறது. ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
ராஷ்மிகாவுடன் மோதும் அனுஷ்கா
குறிப்பாக ராஷ்மிகாவின் படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தி கேர்ள் பிரண்ட் படத்தின் முதல் பாடல் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
காதி மற்றும் தி கேர்ள் ஃப்ரெண்ட் இரண்டு படங்களுமே கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள். இவை இரண்டுமே ஒரே நாளில் வெளியாகுவது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இரண்டு நடிகைகள் போட்டி போடுகிறார்கள்.
இதில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கின்றனர். அனுஷ்கா இந்த படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என்றுஅவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆகையால் யாருக்கு வெற்றி வாகை என்பது படம் வெளியானால் தான் தெரியவரும்.