Cinema : சினிமா என்பது ஒரு கற்பனை கதை தான். நிஜ வாழ்க்கையில் நடிகர்கள் படிக்காவிட்டாலும் கதாபாத்திரத்தில்விஞ்ஞானியாகவும் , டாக்டராகவும், இன்ஜினியராகவும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அப்படி நடித்த ஐந்து டாப் ஹீரோக்களை பற்றி பார்ப்போம்.
விஜய் :
தற்போது சினிமாவில் டாப் நடிகராக கொடி கட்டி பறந்தாலும், விஜய் நிஜ வாழ்க்கையில் கல்லூரி படிப்பில் இருந்து பாதியிலேயே நின்றவர் தான். இருந்த போதிலும் மெர்சல் திரைப்படத்தில் டாக்டர் மாறன் என்ற கதாபாத்திரத்தில் சிறந்த நரம்பியல் நிபுணராக இருப்பது மக்களிடையே நல்ல வரவேற்பை கொடுத்தது .
ரஜினிகாந்த் :
ஒரு சாதாரண கண்டக்டராக இருந்த ரஜினிகாந்த் இன்று சினிமாவில் யாரும் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார். நிஜ வாழ்க்கையில் கண்டக்டர் ஆக இருந்தாலும் சிவாஜி படத்தில் சிஸ்டம் இன்ஜினியர் ஆகவும், எந்திரன் திரைப்படத்தில் விஞ்ஞானியாகவும் நடித்திருக்கிறார்.
தனுஷ் :
நிஜ வாழ்க்கையில் பள்ளிப்படிப்பில் பாதியோடு நின்ற தனுஷ் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் இன்ஜினியர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ஒரு வரவேற்கக் கூடிய விஷயமாக உள்ளது. பள்ளிப்படிப்பு இல்லை என்றாலும் சினிமாவில் ஒரு ஹீரோ தானே!
சிம்பு :
சிம்புவால் நிஜ வாழ்க்கையில் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் போனது இருந்தாலும் சினிமாவில் ஈஸ்வரன் திரைப்படத்தில் ஸ்பிரிட் பவுடர் & அறிவியல் சிந்தனையாளராகவும், வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் லாயர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
வடிவேலு :
சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்து நிஜ வாழ்க்கையில் பெரிதான படிப்பு இல்லாமல், இன்று சினிமாவில் டாக்டர், இன்ஜினியர் போன்ற கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் வடிவேலு. இவரின் காமெடிக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர்.