தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவா இருந்தாலும், ஆரம்ப காலத்தில் நிறைய ரீமேக் படங்களில் நடித்திருக்கிறார். முக்கியமாக தெலுங்கு, மலையாளம் மொழிகளில் இருந்து வந்த கதைகள் தான் அவர் ரீமேக் பண்ணினவை. அந்த படங்களில் பலவும் சூப்பர் ஹிட்டாகி, விஜய்யின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது.
1998 – காதலுக்கு மரியாதை
1998ல் வந்த காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்-ஷாலினி ஜோடி மெல்டான காதலை அழகாக காட்டினாங்க. இளையராஜாவின் இசையோடு, “என்னை தாலாட்ட வருவாளா” சாங் இளம்பெண்களின் ஹார்ட்-பீட் ஆனது. இது 1997 ல் வெளியான மலையாள படம் அனியத்தி பிராவோ வின் ரீமேக் தான்.
1998 – நினைத்தேன் வந்தாய்
1998ல் வெளியான நினைத்தேன் வந்தாய் படத்தில் விஜய், ரம்பா, தேவயானி இணைந்து லவ் ட்ரையாங்கிள் கதையை கலகலப்பாக நடிச்சாங்க. கனவில் வந்த பெண்ணை நிஜத்துல தேடி காதலிக்கிற கதையில் தேவா இசை சூப்பரான ஹைலைட்டா இருந்துச்சு. இது 1997 ல் வெளியான படம் தெலுங்கு ஹிட் பெள்ளி சண்டை ரீமேக் தான்.
2001 – பத்ரி
2001ல் வந்த பத்ரி படத்தில் விஜய்-பூமிகா ஜோடியாக, பாக்சிங் மற்றும் காதல் கலந்த மாஸ் எண்டர்டெயினராக இருந்தது. பூமிகா விஜயை லவ் பண்ணும் போது, விஜய் வேறொரு பெண்ணை நினைத்து போயிட்டு இருப்பாரு, கதையும் காமெடியும் சேர்ந்து சூப்பரா நடந்துச்சு. இது 2000 ல் வெளியான பவன் கல்யாண் நடித்த தெலுங்கு ஹிட் Thammudu வின் ரீமேக் தான்.
2003 – வசீகரா
2003ல் வெளியான வசீகரா படத்தில், வேலைக்குப் போகாத விஜய், நாசரின் வீட்டில் தங்கிவிட்டு சினேகாவுடன் காதல் சண்டை-காமெடி கலந்த சம்பந்தம் உருவாக்குகிறார். வடிவேலுவின் மீசை காமெடிக்கும், இது ஹைலைட். இது 2001ல் வெளியான வெங்கடேஷ் நடித்த தெலுங்கு ஹிட் நவுக்கு நட்சவ அதிகாரப்பூர்வ ரீமேக்.
2004ல் – கில்லி
2004 ல் வெளியான கில்லி படத்தில் விஜய் ஒரு கபடி பிளேயராக, திரிஷாவை கொடூர வில்லன் பிரகாஷ் ராஜிடம் இருந்து காப்பாற்றி, மாஸ், ரொமான்ஸ், ஆக்ஷன் கலந்த செம்ம ஹிட்டடிச்சார். இந்த படமே விஜய்க்கு கிராப் மாற்றித் தந்த டர்னிங் பாயின்ட். இது 2003ல் வெளியான மகேஷ் பாபு நடித்த தெலுங்கு ஹிட் ஒகடு வின் அதிகாரப்பூர்வ ரீமேக்.
2005 – சச்சின்
2005ல் வெளியான சச்சின் படம் விஜய்-ஜெனிலியா ஜோடியாக காதல், காமெடி கலந்த லைட்டா ஓரியான எண்டர்டெயினர். சந்திரமுகியோடு ஒரே நாளில் ரிலீஸ் ஆகி ஆரம்பத்தில் கவனம் கிடைக்காம போனாலும், ரீ-ரிலீஸ்ல ஹிட்டடித்து. இது 2004 ல் வெளியான தெலுங்கு ஹிட் Shahjahan போல தோற்றம் கொண்டாலும், மலையாள ஹிட் ஸ்வப்ன கூடு வின் இன்ஸ்பிரேஷனில் உருவானது.
2007 – போக்கிரி
2007ல் வெளியான போக்கிரி படத்தில் விஜய் ஒரு கேங்க்ஸ்டராக துவங்கி, அண்டர் கவர் ஐபிஎஸ் ஆபீசராக மாறி மாஸ் பர்ஃபாமன்ஸ் கொடுத்தார். அசின் ரொமான்ஸ், வடிவேலு காமெடி, பிரகாஷ் ராஜ் வில்லனிசம் சேர்ந்து படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாய்ச்சு. இது 2006ல் மகேஷ் பாபு நடித்த தெலுங்கு ஹிட் போக்கிரியின் அதிகாரப்பூர்வ ரீமேக்.
2011 – காவலன்
2011ல் வெளியான காவலன் படத்தில் விஜய் அசினுக்கு பாடிகார்டா இருக்க, அசின் மறைமுகமாக விஜயை லவ் பண்ணி செம காமெடியும் ரொமான்ஸும் உருவாகிறது. இறுதியில் ட்விஸ்ட் கொடுத்த love betrayal ஆனா ஹார்ட்டசிங். இது 2010ல் திலீப்-நயன்தாரா நடித்த மலையாள ஹிட் Bodyguard படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்.