Kaithi 2: கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த கைதி படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என தமிழ் சினிமா ரசிகர்களால் பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த படம் LCU- ஆரம்பப் புள்ளி என்பதால் இதன் இரண்டாம் பாகம் விக்ரம், லியோ படங்களின் தொடர் நீட்சியாக இருக்கும் என்பதால் தான் இந்த படத்தின் மீதான மிகப்பெரிய எதிர்பார்ப்பு. படத்தின் ஹீரோ கார்த்தியும் எப்போது இரண்டாம் பாகம் தயாராகும் என காத்துக் கொண்டிருக்கிறார்.
LCU-வில் நுழையும் ஸ்ருதி ஹாசன்
இந்த நிலையில் தான் கைதி இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களின் தலையில் இடியே இறக்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைக்கதைக்கு கொஞ்சமும் ஒத்து வராத வகையில் இரண்டு ஹீரோயின்களை இரண்டாம் பாகத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்ற வருகிறதாம்.
இதில் ஒருவர் நடிகை ஸ்ருதிஹாசன். மேலும் ஸ்ருதிஹாசனை இந்த படத்தில் நடிக்க வைக்க தான் திரைக்கதையை இப்படி மாற்றுகிறார் என்று விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
ஏற்கனவே இவரை எதற்காக கூலி படத்தில் நடிக்க வைத்தார்கள், அவருக்காக கதை அம்சத்தில் மாற்றம் ஏற்படுத்தியதால் தான் இவ்வளவு சொதப்பல் என பேசப்படுகிறது. மேலும் இருவரும் ஒரு ஆல்பம் பாடலில் இணைந்து நடித்த நட்பின் விளைவு தான் இதெல்லாம் என்று கூட சொல்லப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் படத்தின் மற்றொரு ஹீரோயின் ஆக அனுஷ்கா செட்டி நடிப்பதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது. அனுஷ்கா செட்டி ஒரு பெண் டான் அல்லது கார்த்தியின் மனைவியாக நடிப்பதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று ஏற்கனவே சொல்லி இருந்தது.
எது எப்படியோ கைதி போன்ற திரை அம்சம் கொண்ட படத்தில் கதாநாயகிகள் உள்ளே வருவது சர்க்கரை பொங்கலுக்கு வடகறி போன்ற காம்பினேஷன் தான்.