Suriya: கார்த்திக் சுப்பராஜ், சூர்யா கூட்டணியில் கடந்த மே மாதம் ரெட்ரோ படம் வெளியானது. படம் பலருக்கு பிடித்திருந்தாலும் கூட சில நெகட்டிவ் விமர்சனங்கள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
அதேபோல் சூர்யாவின் எதிர்ப்பாளர்கள் சோசியல் மீடியாவில் கொடுத்த விமர்சனங்களும் இதற்கு காரணமாக இருக்கிறது. இருந்தாலும் படத்தில் பாராட்டப்பட கூடிய பல விஷயங்கள் இருக்கிறது.
அதிலும் கனிமா பாடல் பட ரிலீஸ் ஆகும் முன்பே சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இருந்தது. விஷுவலாக படத்தில் பார்க்கும் போதும் ஆச்சரியப்படுத்தியது. அந்த ஒரு பாட்டுக்காகவே படத்தை பார்க்கலாம் என்று சொல்பவர்களும் உண்டு.
ரெட்ரோக்கு பிறகு சூர்யா செம பிஸி
இப்படி கலவையான விமர்சனங்களை பெற்ற ரெட்ரோ படத்திற்கு பிறகு சூர்யா வெங்கி அட்லுரி கூட்டணியில் இணைந்து விட்டார். அதேபோல் கருப்பு படத்தின் டீசர் கூட நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களும் அவருக்கு இருக்கிறது. ஆனால் கார்த்திக் சுப்புராஜ் நிலை தான் இப்படி ஆயிடுச்சு என சொல்ல வைத்திருக்கிறது. அதாவது இதுவரை எந்த தயாரிப்பாளரும் ஹீரோவும் அவரை படம் பண்ணலாம் என்று அழைப்பு விடுக்க வில்லையாம்.
ஆனால் மனிதர் அதற்காக ஒன்னும் கவலைப்படவில்லை. கூலாக வீட்டில் உட்கார்ந்து ஸ்கிரிப்ட் வேலைகளை செய்து வருகிறாராம். நிதானமாக அதை முடித்துவிட்டு அதற்கு ஏற்ற ஹீரோவிடம் சொல்லி ஓகே வாங்கிவிடலாம்.
அதன் பிறகு தயாரிப்பாளர் என அடுத்த கட்டத்திற்கு செல்லலாம் என முடிவெடுத்துள்ளாராம். அதுவும் ஒரு வகையில் நல்லது தான். எந்த தலையிடும் இல்லாமல் கதை எழுதி முடித்து விடலாம்.