2022 ல் சக்தி சௌந்தராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த கேப்டன் படம் 10 நாட்கள் கூட தியேட்டரில் ஓடவில்லை. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 30 கோடி ஆனால் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் வெறும் 10 கோடி பெற்று படம் பிளாப் ஆனது. இது ரெட் ஜெயண்ட் மூவிஸ் கு பெரும் அடி என்றே கூறலாம்.
2022 ல் 15 கோடி பட்ஜெட் ல் ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த காபி வித் காதல் 5 கோடி வசூலை பெற்று படுதோல்வி அடைந்தது. இந்த படம் வெளிவந்த சமயத்தில் லவ்டூடே படமும் ரிலீஸ் ஆனதால் இது பெரும் அளவில் வெற்றி பெறவில்லை என கூறப்படுகிறது. 2 படமும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தான் வெளிவந்தது. லவ்டூடே ஹிட் அடித்தது. காபி வித் காதல் படுதோல்வி அடைந்தது.
2022 ல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வழக்கமாக விஜய் படத்திற்கு வரும் கலெக்ஷன் இந்த படத்திற்கு வராமல் சுமாரான லாபம் வந்தது என கூறலாம்.
2022 ல் விக்ரம் நடிப்பில் வெளிவந்த கோப்ரா படத்தை அஜய் ஞானமூர்த்தி இயக்கினார். 90 கோடி பட்ஜெட் ல் பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இந்த படம் 55 கோடி வசூலை பெற்று பிளாப் ஆனது.
2022 ல் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் பூஜா ஹெக்டே போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்த ராதே ஷியாம் படத்தின் தமிழ் உரிமையை உதயநிதி வாங்கி வெளியிட்டார். இது தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் தமிழில் பிளாப் ஆனது.
2021 ல் ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளிவந்த அண்ணாத்த படத்துக்கு எதிர்பார்த்த அளவில் வரவேற்பு இல்லை . நிறைய பேட் ரெவியூஸ் இந்த படத்திற்கு வந்து படம் பிளாப் ஆனது.