Vijayakanth : கேப்டன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு சினிமாவின் உச்சத்தில் கொடி கட்டி பறந்த நல்ல உள்ளம் கொண்ட நடிகர் விஜயகாந்த்.
1980 கால கட்டங்களில் தொடங்கி 2000 வரையிலும் வெளியான பாதி படங்களில் மாஸ் காட்டியவர் கேப்டன். இவர் நடித்த சத்திரியன், குற்றப்பத்திரிக்கை, சேதுபதி ஐபிஎஸ், வணக்கங்கள் கப்பல் தோட்டம் போன்ற படங்கள் மக்களின் மனதில் சமுதாயத்தை நல்ல எண்ணத்தில்உருவாக்கும் நோக்கத்துடன் அமைந்தது.
அதன் பின் சில நாட்களிலேயே சினிமாவை விட்டு நகர்ந்த விஜயகாந்த் அரசியலில் ஈடுபட தொடங்கினார். தினமும் அவரது வீட்டில் மக்களுக்கு சாப்பாடு குறையாமல் இருக்கும். ஏழை மக்கள் பசி என்று வந்தால் பசியாற்றாமல் விடாத விஜயகாந்த் கேப்டன் என்ற பட்டம் பெற்றார்.
மக்களுக்கு நல்லதே செய்ய வேண்டும் என நினைத்த கேப்டன் தனது 2 மகன்களையும் அவ்வழியிலே வளர்த்தார். அவர் மறைந்தாலும் அவரது புகழ் மண்ணை விட்டு மறையவில்லை.
தற்போது விஜயகாந்த் பேசியது குறித்து அவரது மகன் சண்முக பாண்டியன் தற்போது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“பெரிய பையன் அரசியலில் நல்லது செய்யணும். சின்ன பையன் சினிமாவில் என்னை மாதிரி எல்லாருக்கும் சோறு போட்டு பாத்துக்கணும்-கேப்டன் மகன்”. விஜயகாந்தின் இந்த நல்ல குணம் தான் தமிழ்நாட்டில் இன்னும் சில ரசிகர்கள் கோயில் கட்டிக் கொண்டாட காரணம்.