Nayanthara: பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கதையாக இவ்வளவு நாட்களாக தயாரிப்பாளர்களுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்தார் நடிகை நயன்தாரா. தான் வச்சதுதான் சட்டம் என்று கெத்து காட்டியவரை அசால்ட் ஆக டீல் பண்ணி இருக்கிறார் மூக்குத்தி அம்மன் 2 பட இயக்குனர் சுந்தர் சி.
நயன்தாராவுக்கு சமீப காலமாக பெரிய ஹிட், பெரிய ஹீரோக்கள் படங்கள் என எதுவுமே இல்லை. கிட்டத்தட்ட அவருடைய மார்க்கெட் அதல பாதாளத்தில் தான் இருக்கிறது. இந்த சமயத்தில் தான் அவருக்கு மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அடக்கி வாசிக்கும் நயன்தாரா
முதல் பாகம் ஏற்கனவே நயன்தாராவுக்கு மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இதனால் இரண்டாம் பாகத்தை மலைபோல் நம்பி இருக்கிறார். மேலும் இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் சரியாக நடந்து கொண்டால் தான் அடுத்தடுத்து தமிழ் படங்கள் வரும் என்பதை நேக்காக தெரிந்து கொண்டு காய் நகர்த்துகிறார்.
அதாவது படப்பிடிப்புக்கு 10 நிமிடத்திற்கு முன்பே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுகிறாராம். மேலும் இயக்குனர் பேக்கப் சொல்வதற்கு முன்னால் எந்த ஒரு காரணத்திற்காகவும் கேரவன் பக்கம் போவது கிடையாதாம்.
மார்க்கெட் காலியானதால் பழைய சின்சியாரிட்டியை மீண்டும் கையில் எடுத்து இருக்கும் நயன்தாராவுக்கு மூக்குத்தி அம்மன் தமிழ் சினிமாவில் வழிகாட்டுகிறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.