ரோகிணியின் சூழ்ச்சி.. திருட்டு செயின் விஷயத்தில் ஜெயிலுக்கு போகும் விஜயா – Cinemapettai

Tamil Cinema News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற ‘சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயா கனவு கண்டு பயத்தில் இருக்கும் சமயத்தில் அண்ணாமலை கீரை விற்கும் லேடியை கூட்டிட்டு வருகிறார். அந்த லேடி வேறு யாரும் இல்ல விஜயா கனவில் அண்ணாமலை தாலி கட்டிய அதே லேடி தான்.

விஜயா அதை பார்த்து பயத்தில் இருந்த சமயம், கீரை விற்கும் லேடி அண்ணாமலையை பார்த்து சார் நீங்க ரொம்ப இளமையா இருக்கீங்க, உங்களுக்கு ஒரு 40 வயசு இருக்குமா என்று விசாரிக்கிறார்.

அதற்கு அண்ணாமலை எனக்கு 65 வயசு ஆகுது. நான் என்ன அப்படியா இளமையா இருக்க என சொல்ல, விஜயாவுக்கு கோபம் வந்து இன்னைக்கு இந்த வீட்டில் கீரை வைக்க கூடாது. உடம்புக்கு நல்லதா இருந்தாலும் வேண்டாம். அந்த கீரைவிற்கும் லேடி யை திட்டி அனுப்பிவிடுகிறாள்.

அதன் பிறகு விஜயா, சிந்தாமணி பங்க்ஷனுக்காக அழகாக அலங்காரம் செய்து கிளம்பினார். அங்கே நடந்த பரபரப்பான ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஒரு விருந்தாளியாக வந்த ஒரு சேட் லேடி, விஜயா கழுத்தில் இருந்த செயினை பார்த்து, “இந்த செயின் எனக்கே சொந்தம்!” என சொல்கிறார்.

பார்வதியும் பேச முயற்சித்தாலும், அந்த லேடி செயினின் டாலரை திருப்பி பார்க்க சொன்னதும் உண்மை வெளிப்பட்டது — அதில் “சைந்தவி” என்கிற பெயர் இருந்தது!
இதனால் ஏற்பட்ட பெரும் குழப்பத்தில் அந்த லேடி போலீஸை அழைத்துவிட்டார்.

போலீஸார் விசாரணையில், விஜயா அந்த செயினை தனது மருமகள் ரோகிணி கொடுத்ததாக தெரிவித்தார். உடனே ரோகிணி நேராக ஸ்டேஷனுக்கு வந்து “என்ன பிரச்சனை?” எனக் கேட்க, போலீஸ்காரர் செயின் திருடப்பட்டது என்பதை விளக்கியபோது, ரோகிணி திகைத்து போனார். அது சிட்டி கிட்ட வாங்கியது என கூற, போலீஸ்காரர் சிட்டியையும் வரவழைத்தார்.

சிட்டி, தன்னை நேரடியாக குற்றவாளியாக மறுக்க, “என் நண்பன் தான் திருடி என்னிடம் கொடுத்தான் என ஒப்புக்கொண்டார். அந்த நண்பனையும் போலீஸ் பிடித்து விசாரணைக்குட்படுத்தினர். திருட்டுச் செயினை சைந்தவிக்கு திருப்பி கொடுத்த போலீஸ், விஜயா மற்றும் ரோகிணியிடம் சைன் வாங்கி அனுப்பிவிட்டார்கள். இதனால் வீட்டுக்கு வந்த விஜயா, ரோகிணியை கடுமையாக கண்டித்ததோடு வீட்டை விட்டு வெளியேறச் சொன்னாள்.

வீட்டில் இப்பொழுது பரபரப்பான சூழ்நிலை. அண்ணாமலை, முத்து, ஸ்ருதி உள்ளிட்டோர் எல்லோரும் ஷாக் ஆகி நிற்க, முத்து தான் காரில் பிரேக் பண்ணிய சம்பவமும், பார்லர் அம்மாவும் சிட்டியுடன் தொடர்பிலும் சந்தேகம் வைத்துக் கொள்கிறார். சிட்டியின் நடத்தை, ரோகிணியின் நம்பிக்கையை சிதைத்துவிட்டது. ஒரு செயின் கதையைத் தொடர்ந்து, ஒரு பெரிய குடும்ப பிரச்சனை உருவானது.

ரோகிணி தனது தவறை உணர்ந்து, “நான் காசு கொடுத்துத்தான் வாங்கினேன், திருட்டு செயின்னு தெரியாது” என அழுது பேசினாலும், விஜயா கேட்பதில்லை. “நீ என் குடும்பத்தில் இருக்கவே கூடாது” என வெறுப்புடன் வீட்டைவிட்டு வெளியே தள்ளி விடுகிறார்.

ரோஹிணியை மனோஜ் வீட்டுக்கு அழைத்து வருவானா? இல்லையா என்பதை இனி வரும் எபிசொட் இல் பார்க்கலாம்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.