Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பரதநாட்டில் லவ் ஜோடிகள் பண்ணிய அட்டூழியங்கள் எதையும் விஜயா கண்டு கொள்ளவில்லை. அவ்வப்போது மீனா, பார்வதி அத்தை வீட்டுக்கு வரும் பொழுது இவர்களுடைய சேர்க்கை சரி இல்லை என்று எத்தனையோ முறை கூறியிருக்கிறார். ஆனால் அப்பொழுதெல்லாம் விஜயா, மீனா சொல்வதை கண்டு கொள்ளாமல் திட்டி அவமானப்படுத்தி இருக்கிறார்.
அதற்கெல்லாம் சேர்த்து வைக்கும் விதமாக தற்போது விஜயாவுக்கு பிரச்சனை வந்துவிட்டது. அதாவது பரதநாட்டியம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது லவ் ஜோடியில் அந்தப் பெண் மயக்கம் போட்டு கீழே விழுந்து விடுகிறார். உடனே விஜயாவும் பார்வதியும், அந்தப் பெண்ணை கூட்டிட்டு ஆஸ்பத்திரிக்கு போகிறார்கள். அங்கே போனதும் டாக்டர் செக் பண்ணி பார்த்தது அந்தப் பெண் கர்ப்பம் என்று சொல்லிவிடுகிறார்.
பிறகு வீட்டிற்கு வந்த விஜயா எதுவுமே நடக்காத போல் சாதாரணமாக இருக்கிறார். இன்னொரு பக்கம் நடுரோட்டில் மயக்கம் போட்டு விழுந்த ரோகிணியின் அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு கிரிசை முத்து வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். பிறகு க்ரிஷ் சோகமாக இருப்பதால் முத்து சுருதி ரவி அனைவரும் அவனை சந்தோசமாக வைப்பதற்காக ஆட்டம் பாட்டம் ஆடி கொண்டாடுகிறார்கள்.
அந்த நேரத்தில் ஒரு கும்பல் விஜயா வீட்டுக்குள் நுழைந்து இங்கே யார் விஜயா என்று கேட்கிறார்கள். அதற்கு விஜயா நான் தான் என்று சொல்லும் பொழுது அந்த கும்பலில் ஒரு பெண் விஜயாவை அடிப்பதற்கு கை ஓங்கி விடுகிறார். உடனே மீனா அந்தப் பெண்ணை தடுத்துவிட்டு பேசிக்கொண்டிருக்கும் பொழுது நீங்க கை ஓங்கிரிங்க என்று மாமியாருக்காக சப்போர்ட் பண்ணி பேசுகிறார்.
அப்பொழுதுதான் என்ன பிரச்சனை என்று தெரியும் பொழுது பரதநாட்டிய கிளாசுக்கு வந்த பெண் அங்கிருக்கும் ஒரு பையனுடன் நெருங்கி பழகி கர்ப்பமாக இருக்கிறார் என்று சொல்லி விஜயாவை திட்டுகிறார்கள். உடனே அங்கு இருப்பவர்கள் அந்த கும்பலை சமாளித்து வெளியே அனுப்பி விடுகிறார்கள். பிறகு முத்துவும் மீனாவும் அந்த ஜோடிகளை பற்றி ஏற்கனவே நாங்கள் சொல்லி இருக்கிறோம்.
ஆனால் நீங்கள் தான் எதையும் கேட்காமல் அவர்களை நம்புனீங்க. இப்பொழுது எங்கு கொண்டு வந்து விட்டு இருக்கு என்று தெரியுமா என விஜயாவுக்கு சவுக்கடி கொடுக்கிறார்கள். இன்னொரு பக்கம் ரோகினியின் அம்மாவின் உடல்நிலை சரி இல்லாததால் ஹாஸ்பிடலில் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனால் கிரிஷ் முத்து கூட இருப்பதால் ரோகிணியால் சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார்.