Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், லோக்கல் ரவுடி சிட்டி கொடுத்த வாக்குமூலம் படி ரோகினி மீது தான் தவறு இருக்கிறது என்று மீனாவுக்கு தெரிந்து விட்டது. உடனே வீட்டுக்கு போன மீனா, ரோகிணி மீது கோபப்பட்டு தீபன் வீட்டில் ஆள வைத்து அடிக்க சொன்னது ரோகிணி தான் என்று சொல்கிறார். அப்பொழுது கூட ரோகினி உண்மையை ஒத்துக் கொள்ளாமல் மறைக்கப் பார்த்தார்.
அந்த சமயத்தில் போலீஸ் வந்து சிட்டி சொன்ன விஷயத்தையும் ரோகிணி மீது தான் தவறு இருக்கிறது என்பதையும் குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்கிறார். உடனே விஜயா, ரோகினியை அதட்டி கேட்ட நிலையில் ரோகிணி, நான் சமாதானமாக தான் பேச சொன்னேன். யாரையும் அடிக்க சொல்லவே இல்லை என்று பொய் சொல்லி விடுகிறார். கடைசியில் போலீஸ், ரோகிணியை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விடுகிறார்கள்.
பின்னாடியே மீனா மற்றும் மனோஜ் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார்கள். அங்கே போனதும் போலீசிடம் ரோகிணி நான் யாரையும் அடிக்க சொல்லவில்லை. நான் சமாதானமாக பேசுவதற்காக தான் சிட்டியை அனுப்பினேன் என்று பொய் சொல்லி விடுகிறார். அதற்கு போலீஸ் தப்பு செஞ்சவர்களை விட தப்பு செய்ய தூண்டியவர்கள் தான் பெரிய குற்றவாளி.
அதனால் FIR இல் உங்க பெயரையும் சேர்த்து தான் நாங்கள் எழுதுவோம் என்று சொல்கிறார்கள். உடனே ரோகிணி பயத்தில் அழுது போலீஸிடம் கெஞ்சுகிறார். இதை பார்த்து பாவப்பட்ட மீனா, என்ன இருந்தாலும் நம்ம குடும்பத்தில் ஒருவராக போய்விட்டார். அதனால் நாம் தான் ரோகிணியே காப்பாற்ற வேண்டும், இல்லை என்றால் மாமா மனசு கஷ்டப்படும் என்று சொல்லி மீனா ரோகினி காப்பாற்ற சொல்கிறார்.
அதன்படி மீனா மற்றும் முத்து, போலீஸ் இடம் பேசி ரோகிணியை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார்கள். ஒரு வழியா இந்த பிரச்சனை முடிந்து விட்டது என்று விஜயா கோவிலில் அன்னதானம் வழங்குவதற்கு முடிவு பண்ணி விட்டார். இதைப் பார்த்த முத்து, அம்மா கையில் சாப்பிட வேண்டும் என்று அந்த பந்தியில் சாப்பிட உட்கார்ந்து விட்டார்.
அப்பொழுது விஜயா சாப்பாடு வைக்க யோசித்த பொழுது எனக்கு சின்ன வயசுல இருந்து இந்த ஒரு பாக்கியம் கிடைக்கவில்லை. இனிமேலும் நீங்கள் எனக்கு இந்த மாதிரி சாப்பாடு கொடுப்பீங்களன்னு தெரியல, அதனால உங்க கையால சாப்பிடணும்னு ரொம்ப ஆசையாக இருக்கிறது என்று பீல் பண்ணி பேசி சென்டிமெண்டாக விஜய மனதில் இடம் பிடிக்கிறார்.
இதற்கு இடையில் ரோகினியை போலீஸ் கூட்டிட்டு போகும் பொழுது அங்கு இருந்த கிரிஷ், ரோகிணியை கூட்டிட்டு போக வேண்டாம் என்று சொல்லுங்க என எல்லோரிடமும் கெஞ்சி அழுகிறார். க்ரிஷ் ரோகினி மீது காட்டும் பாசத்தை வைத்து மீனாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது. இதனால் மீனா, முத்துவிடம் நடந்ததை சொல்லும்பொழுது முத்து ரோகிணிக்கும் கிருஷ்க்கும் ஏதாவது சம்பந்தமா என்பதை கண்டுபிடிக்கும் விதமாக களத்தில் இறங்கப் போகிறார்.