Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணிக்கு பிரச்சனை வருகிறது என்பதை விட பிரச்சனையில் போய் தானாக மாட்டிக் கொள்வதே ரோகினிக்கு வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் விஜயவால் ஆரம்பித்த ஒரு பிரச்சனை ரோகிணி பக்கம் திரும்பியதால் போலீஸிடம் ரோகிணி கையும் களவுமாக சிக்கிக் கொண்டார்.
இதுவரை மரியாதை கொடுத்து அமைதியாக இருந்த மீனா, முத்து போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதை பார்த்து ரோகினி மீது ஆவேசமாக கோபப்பட்டு விட்டார். இருந்தாலும் ரோகிணி போலீஸ் ஸ்டேஷனில் இருந்தால் குடும்பத்துக்கு தான் கெட்ட பெயர், மாமாக்கு மனசு கஷ்டம் என்று சொல்லி ரோகினியை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கூட்டிட்டு வந்து விடுகிறார்கள்.
இதற்கு இடையில் ரோகிணியை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனதை பார்த்த க்ரிஷ், அம்மா பாசத்தில் ரோகினி எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வெளியே வந்து விட வேண்டும் என்று கோவிலில் பிரார்த்தனை பண்ணுகிறார். க்ரிஷ் தனியாக கோவிலில் சாமி கும்பிட்டு இருப்பதை பார்த்த அண்ணாமலை மற்றும் ரவி என்னாச்சு ஏன் அழுகிறாய் என்று கேட்கிறார்கள்.
அதற்கு க்ரிஷ், எங்க அம்மாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விட்டார்கள் அவர்கள் நல்லபடியாக வந்து விட வேண்டும் என்று வாய் தவறி சொல்லி விடுகிறார். அதன் பிறகு அண்ணாமலை யார சொல்லுகிறாய் என்று கேட்டதும் சுதாகரித்துக் கொண்ட க்ரிஷ் ரோகிணி ஆன்ட்டி என்று சமாளித்து விடுகிறார்.
பிறகு பிரச்சினை எல்லாம் தாண்டி வீட்டிற்கு வரும் ரோகினியை பார்த்ததும் க்ரிஷ் ஓடிப்போய் கட்டி பிடித்துக் கொள்கிறார். இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகி விட்டார்கள், ஆனாலும் இதை சமாளிக்கும் விதமாக ரோகிணி ஈசியாக எல்லோரையும் ஏமாற்றி விடுவார். இருந்தாலும் ரோகிணிக்கும் க்ரிஷ்க்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது என்று முத்து மற்றும் மீனாவிற்கு சந்தேகம் வரப்போகிறது.
அந்த சந்தேகத்தின் படி க்ரிஷ் பற்றிய விஷயங்களை கண்டுபிடிப்பதற்கு களத்தில் இறங்கப் போகிறார்கள். அதனால் இன்னும் கூடிய சீக்கிரத்தில் கல்யாணி தான் ரோகிணி முகத்திரையில் இங்கே வந்து இருக்கிறார் என்று கண்டுபிடித்து குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்தி விடுவார்கள்.