Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், க்ரிஷ் அம்மா துபாயிலிருந்து வந்து ஸ்கூலில் இருந்து கிருஷ்வை கூட்டிட்டு போய் விட்டாய் என்று தெரிந்ததும் முத்து சோகத்துடன் வீட்டுக்கு வந்து சொல்கிறார். அப்பொழுது மீனா சந்தேகப்பட்டு நிறைய கேள்வி கேட்கிறார். ஆனால் அதை பெரிசு படுத்தாமல் விஜயா தொல்லை முடிந்து விட்டது என்று விட்டுவிடுங்கள் என சொல்லிவிடுகிறார்.
அடுத்து மீனா, அம்மா வேலை பார்க்கும் கோவிலுக்கு போகிறார். அங்கே அன்னதானம் கொடுக்கிறார்கள் மீனாவும் அம்மாவும் சாப்பிட போகிறார்கள். ஆனால் ஏற்கனவே அங்கே க்ரிஷ் பாட்டி அன்னதானத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் கிரிஷ் பாட்டியை பார்க்காமல் மீனா ஒரு முக்கியமான வேலை வந்துவிட்டது என்று கிளம்பி விடுகிறார்.
மீனா அடிக்கடி இந்த கோவிலுக்கு வருவதை தெரிந்து கொண்ட க்ரிஷ் பாட்டி இனி இங்கே வரக்கூடாது என்று முடிவு பண்ணி யாருக்கும் தெரியாமல் போய்விடுகிறார். அடுத்ததாக மனோஜ் ஷோரூம் இல் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை கொடுத்து பொருட்களை வாங்கலாம் என்று மாதா பிறை சீட்டு போட்டிருந்தார்கள். அதில் ஒரு நபர் மீனாவின் தோழி என்பதால் ஆஸ்பத்திரி செலவுக்காக பணம் வேண்டும் என்று மனோஜ் ஷோரூம் இல் கட்டிய படத்தை கேட்க போயிருக்கிறார்கள்.
ஆனால் அங்கு வேலை பார்க்கும் நபர் அப்படி எல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்லி அனுப்பி விடுகிறார்கள். உடனே அந்த நபர் மீனா விடமும் முத்துவிடவும் சொல்கிறார்கள். உடனே இவர்கள் மனோஜ் ஷோரூம் அந்த நபரை திட்டுகிறார்கள். அப்பொழுது விஷயத்தை கேள்விப்பட்ட மனோஜ், 25 ஆயிரம் ரூபாய் தான் அவங்க கேட்டிருக்காங்க அதை எடுத்துக் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி லாக்கரை திறக்கிறார்.
அப்படி பார்க்கும் போது அந்த லாக்கரையில் கொஞ்சம் கூட பணம் இல்லை என்றதும் மனோஜ் அதிர்ச்சியாகிவிட்டார். இதை ரோகினிடம் சொல்லிய பொழுது ரோகிணி தான் பணத்தை திருடி இருக்கிறார் என்பதால் எதுவும் நடக்காத போல் ரோகிணி வேடிக்கை பார்க்கிறார். இதனால் மனோஜ்க்கு ஷோரூம் இல் ஏகப்பட்ட பிரச்சனை வர ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் முத்து இந்த பணத்தை யார் திருடி இருக்கிறார் என்பதை கண்டுபிடிப்பார். இதில் ரோகிணி மாட்டிக் கொள்வார்.