விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணியின் கல்யாண ரகசியமும் கிரிஷ் பற்றிய விஷயமும் எப்பொழுது வெளிவரும் என்று பல மாதங்களாக காத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்னும் ஒரு சில நாட்களில் ரோகிணி ரகசியம் வெளிவரப்போகிறது.
அதாவது கிரிஷை யாருக்கும் தெரியாமல் தங்கிப் படிக்கும் ஒரு ஸ்கூலில் சேர்த்து விட்டால் எந்த பிரச்சினையும் வராது. குடும்பத்திற்குள்ளும் குழப்பம் ஏற்படாது என்று முடிவு பண்ணிய ரோகினி, கிரிஷை கூட்டிட்டு போர்டிங் ஸ்கூலுக்கு சேர்த்து விட போகிறார். அங்கேயும் தந்திரமாக அவருடைய பெயரை கொடுத்தால் பிரச்சினையாகிவிடும் என்று காடியனுக்காக மகேஸ்வரி என்கிற தோழியை கூட்டிட்டு வந்து வேலையை கமுக்கமாக முடிக்கிறார்.
ஆனால் இங்கே தங்கி படிப்பது கிரிஷ்க்கு பிடிக்கவில்லை என்பதால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார். இருந்தாலும் ரோகிணி, கிரிஷை சமாதானப்படுத்தி இருக்க வைத்து விடுகிறார். அடுத்ததாக விஜயா, கிரிஷ் பாட்டியை பார்த்த விஷயத்தை வீட்டில் வந்து சொல்லியதும் மீனாவும் முத்துவும் கிராமத்திற்கு சென்று அந்த வீட்டில் இருக்கிறாரா என்பதை பார்ப்பதற்கு போகிறார்கள்.
இந்த விஷயத்தை தெரிந்துகொண்ட ரோகினி அங்கு இருக்கும் வீட்டின் ஓனருக்கு போன் பண்ணி வீட்டை நாங்கள் காலி பண்ணி விடுகிறோம் என்று சொல்கிறார். அடுத்ததாக முத்துவும் மீனாவும் க்ரிஷ் பாட்டி வீட்டுக்கு போன நிலையில் அவர்கள் காலி பண்ண விஷயத்தை தெரிந்து கொள்கிறார்கள். அந்த வகையில் மீனாவுக்கு சந்தேகம் அதிகமாகிவிட்டது.
எப்படியாவது க்ரிஷ் பற்றிய ரகசியத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று முத்துவும் மீனாவும் மும்மரமாக இறங்கி விடுகிறார்கள். அதனால் இன்னும் ஒரு சில நாட்களில் ரோகிணியின் முகமூடி வெளிவரப் போகிறது. அப்படி தெரிய வந்தால் மனோஜ் எடுக்க போகும் முடிவு என்னவாக இருக்கப்போகிறது. ரோகிணியின் நிலைமை கேள்விக்குறியாக நிற்குமா அல்லது இதையும் பொய் சொல்லி சமாளித்து விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.