மாதவன், அரவிந்த்சாமி, பிரசாந்த் வரிசையில் தமிழ் சினிமாவிற்கு மற்றொரு சாக்லேட் பாய் ஹீரோ கிடைத்திருப்பார். ஆனால் சுதாரிக்காமல் விட்டதால் இன்று சினிமாவில் அவர் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது. இன்று 57 வயதான பின்பு அவருக்கு புத்தி வந்து புலம்பி கொண்டிருக்கிறார்.
நல்ல 6 அடி உயரம், சாக்லேட் பாய் தோற்றம் என ஆரம்பத்தில் இவருக்கு சினிமா நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது. அதன் பின்னால் அவர் எடுத்த முடிவால் அனைத்தும் நாசமாய் போனது என்று அவர் கொடுத்த பேட்டியிலேயே கூறியிருக்கிறார்.
மற்றவர்கள் சொல் பேச்சு கேட்காமல் காசுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக சம்பளம் கேட்டு விட்டேன். அப்படி அறிவில்லாமல் நான் எடுத்த முடிவு இன்று வரை எனக்கு, என் மீதே கோபம் ஏற்படுத்தி வருகிறது என்று தான் கொடுக்கிற பேட்டியில் எல்லாம் புலம்பி தள்ளுகிறார்.
1987ஆம் ஆண்டு வண்ணக் கனவுகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதன் பின்னர் சத்யா, அபூர்வ சகோதரர்கள், அஞ்சலி என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்தாலும் இவரை ஒரு நடிகனாக தமிழ் சினிமா காட்டியது மணிரத்தினத்தில் திருடா திருடா படத்தில் தான். அதன்பின் மணிரத்தினத்தின் ஆதரவு இவருக்கு பெரிதும் கிடைத்தும் கூட பயன்படுத்திக் கொள்ளவில்லை.
திருடா திருடா படத்தில் பிரசாந்துடன் இணைந்து நடித்திருப்பார் ஆனந்த். கதிர் கதாபாத்திரத்தில் இரண்டாம் ஹீரோ என்று கூட சொல்ல முடியாது, அந்த அளவிற்கு முக்கியமான கதாபாத்திரம் தான் இருவருக்கும். ஆனந்த் நல்ல அழகான லுக் இருந்தும் சினிமாவில் ஜெயிக்க முடியவில்லை ரோஜா, மௌன ராகம், டூயட் போன்ற படங்களில் இவர் ஹீரோவாக நடிக்க அழைப்பு வந்தும் கூட வீணடித்து விட்டார்.