ரோபோவாக இருந்து கஷ்டப்பட்ட சங்கர்.. உடல் பாதித்தற்கு இதுதான் காரணம் – Cinemapettai

Tamil Cinema News

சற்றும் எதிர்பாராத விதமாக ரோபோ சங்கரின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருக்கிறது. சில தினங்களுக்கு முன் படபிடிப்புக்கு சென்ற ரோபோ சங்கர் படப்பிடிப்பு தளத்தில் மயக்கம் போட்டு விழுந்ததால் அங்கு இருப்பவர்கள் துரைப்பாக்கத்தில் இருந்த தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார்கள். அங்கே அவருக்கு டிரீட்மென்ட் கொடுக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் நேற்று மதியம் ரோபோ சங்கரின் உடல் இக்கட்டான சூழலில் இருப்பதாகவும் அதனால் ICU வைத்திருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் நேற்று இரவு ரோபோ சங்கர் இறந்துவிட்டார் என்ற செய்தி ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியாகிவிட்டது. மேலும் ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி, தனுஷ், சிவகார்த்திகேயன், செந்தில், இளவரசு, ராதாரவி, விஜய் ஆண்டனி மற்றும் பலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்கள்

இதனை தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு இவருக்கு செய்ய வேண்டிய சடங்குகள் செய்ய போகாதக ரோபோ சங்கரின் குடும்பத்தார்கள் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நடிகர் இளவரசு கொடுத்த பேட்டி பலரையும் உருக வைத்திருக்கிறது. அதாவது ஆரம்ப காலத்தில் உடலில் சில்வர் பெயிண்ட் பூசிக்கொண்டு நடன மேடை நிகழ்ச்சியில் பங்கேற்று ரோபோ மாதிரி ஒரு நாள் முழுவதும் நின்று வாடிக்கையாளர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.

ரோபோவாக மாறிய தருணம்

அதன் பின் அந்த பெயிண்டை உடம்பிலிருந்து நீக்குவதற்காக மண்ணெணையை ஊற்றி துடைத்து எடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக மண்ணெண்ணை மற்றும் பெயிண்ட் அதிகம் பயன்படுத்தப்பட்டதால் அவருடைய தோல் வழுவழுந்து விட்டது. அதனால் தான் அடிக்கடி அவருக்கு உடலில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது. இதனால் மஞ்சள் காமாலை வந்து ரொம்பவே பாதிப்பானார். இதனால் தான் அவருடைய உடல் பாதிக்கப்பட்டு இளம் வயதிலேயே மறைவதற்கு காரணம் என்று நடிகர் இளவரசு பேட்டி கொடுத்திருக்கிறார்.

இது ஒரு காரணமாக இருந்தாலும் ரோபோ சங்கர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் அவர் கூறியது என்னவென்றால், நான் அடிக்காத சரக்கே கிடையாது. நான் பார்க்காத பாட்டிலும் கிடையாது. அதாவது 60 ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் பாட்டில் வரை நான் பார்த்துட்டேன். எந்த அளவுக்கு போக முடியுமோ அந்த அளவுக்கு நான் குடித்திருக்கிறேன்.

robo-shankar-photo
robo shankar photo

தவறை திருத்திக் கொண்ட ரோபோ சங்கர்

ஆரம்பத்தில் சோசியல் ட்ரிங்கர் ஆக பழகிய விஷயங்கள் தான் போகப் போக குடிப்பழக்கத்திற்கு அடிமையாக வைத்தது. அதனால் சாகும் எல்லை வரைக்கும் சென்று திரும்பி வந்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் எல்லாம் திருந்தி குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் இந்த தருணத்தில் அவருடைய மறைவு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்துகிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.