50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் மாஸான இடத்தை பிடித்தவர் ரஜினிகாந்த், தொடக்கத்தில் வில்லனாக அறிமுகமானார். அவரது ஸ்டைல் மற்றும் கடின உழைப்பால் சூப்பர் ஸ்டார் என உயர்ந்தார்.
ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் பாடகர் தயாரிப்பாளர் என்று பலதரப்பட்ட திறமைகள் கொண்டவர். அவர் நடிகை இல்லை என்றாலும் ஒரு படத்தில் மட்டும் நடித்துள்ளார். 1982-ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கிய “அக்னி சாட்சி” படத்தில் ரஜினி லதா இருவரும் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.
1986-ம் ஆண்டு மாவீரன் மற்றும் 1993-ம் ஆண்டு வள்ளி என்ற இரு படங்களை தயாரித்துள்ளார். இதில் ரஜினி ஹீரோவாக நடித்துள்ளார். இவ்வாறு லதா ரஜினிகாந்த் பட தயாரிப்பில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார்.
கமலுக்காக பாடிய பாடல்
லதா ரஜினிகாந்த் இசை உலகிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
அவர் 5 பாடல்களை பாடியுள்ளார், அதில் நான்கு இளையராஜா இசையில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1981-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் டிக் டிக் டிக். இதில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய ‘நேற்று இந்த நேரம்’ பாடலை லதா ரஜினிகாந்த் பாடியிருக்கிறார். 1984-ல் “அன்புள்ள ரஜினிகாந்த்” படத்தில் ‘கடவுள் உள்ளமே’ பாடலையும் இவர்தான் பாடியுள்ளார்.
1993-ல் “வள்ளி” படத்தில் ‘டிங் டாங்’ மற்றும் ‘கூக்குக் கூ’ ஆகிய பாடல்களையும் பாடியுள்ளார். 2014-ல் “கோச்சடையான்” படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘மணப்பெண்ணின் சத்தியம்’ பாடியுள்ளார். இப்படி லதா ரஜினிகாந்த் தனது பல திறமைகளால் தனி இடத்தை உருவாக்கியுள்ளார்.