Memes: முக்கிய பண்டிகை நாட்களில் பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவரும். விடுமுறை தினம் என்பதால் வசூல் அள்ளிவிடலாம் என தயாரிப்பாளர்கள் இப்படி ஒரு பிளான் போடுவது உண்டு.

அதேபோல் பண்டிகை காலங்களில் புது படங்களை தியேட்டரில் என்ஜாய் செய்வதற்கு என்று ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆனால் இப்போது பார்த்தால் பட ரிலீஸுக்கு லீவு விடுற நிலை வந்துவிட்டது.

அதுவும் ரஜினி படத்திற்கு மட்டும்தான் இந்த அளப்பறை. ஏற்கனவே எந்திரன் படம் வெளியாகும் போது ஆபீஸில் இருப்பவர்கள் எல்லாம் அன்று லீவ் கேட்டு லெட்டர் கொடுத்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

போகப் போக சில கார்ப்பரேட் கம்பெனிகள் ரஜினி படம் ரிலீஸ் ஆனால் தானாகவே முன்வந்து லீவு கொடுத்து விடுகிறார்கள். அப்படித்தான் லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள கூலி படத்திற்கும் நடந்துள்ளது.

வரும் 14ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. அதற்காக சில கார்ப்பரேட் கம்பெனிகள் விடுமுறை அறிவித்துள்ளது. ஆனால் இது எல்லாமே பக்கா பிளான் மற்றும் ப்ரமோஷன் தான்.

இப்படி எல்லாம் செய்து வசூல் பார்க்க வேண்டிய நிலை இருக்கிறதா. படம் மட்டும் ஆயிரம் கோடி அடிக்காம போகட்டும் அப்புறம் இருக்கு என இணையவாசிகள் கமெண்ட் கொடுக்கின்றனர்.

அதற்கேற்றார் போல் இப்போது டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது படத்திற்கு லாபமா இல்லையா என்பது சில நாட்களில் தெரிந்து விடும். அது பற்றிய சில சோசியல் மீடியா மீம்ஸ் தொகுப்பு இதோ.