LCU: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து லோகேஷ் தன்னுடைய LCU -வில் இணையும் புதிய படத்தை இயக்கப் போகிறாரா, அல்லது LCU -வை முடித்து வைக்கப் போகிறாரா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது.
அதற்கான விடை தான் தற்போது கிடைத்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சினிமாடிக் யூனிவர்ஸை முடித்து வைக்கப் போகிறார். இதை முடித்து வைக்கவே லோகேஷ் கனகராஜ் மூன்று படங்களை இயக்க வேண்டும்.
லோகியின் பிளான்!
ரஜினியின் கூலி படம் முடிந்ததும் லோகேஷ் கார்த்தியை வைத்து கைதி2 இயக்கப் போகிறார். இதில் சூர்யா அதாவது ரோலக்ஸ் கேரக்டர் வில்லனாக நடிக்க இருக்கிறார். இந்த படம் முடிந்த கையோடு கமலை வைத்து விக்ரம் ரிட்டன்ஸ் படம் பண்ண இருக்கிறார்.
அத்தோடு இந்த எல் சி யு வை முடித்து வைக்கப் போவது ரோலக்ஸ் திரைப்படம். சூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை கமலஹாசன் தயாரிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் விஜய் எடுக்கும் முடிவை வைத்து லியோவை இதற்குள் கொண்டு வருவதா அல்லது லியோ இல்லாமல் இந்த யூனிவர்ஸ் முடித்து வைக்கப்படுமா என்பது இனி தான் தெரியும்.