Lokesh : இயக்குனர் லோகேஷ் என்றல் தற்போது பான் இந்திய அளவுக்கு பிரபாலகி உள்ளார் அதனால் இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. இவர் குறிப்பிட்டு நான்கைந்து படங்கள் தான் இயக்கியுள்ளார்.
ஆனால் அந்த நான்கைந்து படங்களிலும் இவர் அடைந்த வெற்றி என்பது பல மடங்கு அதிகம். லோகேஸ் கனகராஜ் தனக்கென்ற ஒரு ஹாலிவுட் ரேஞ்சில் கூட ரசிகர்களை வைத்துள்ளார்.
நோட்டீஸ் பீரியடுல ரெடி பண்ண சாதனை..
இவர் இந்த இடத்தை அடைந்ததற்கு அதிர்ஷ்டம் என பலர் சொல்லிக்கொண்டாலும் முழுக்க முழுக்க இவரது கடின உழைப்புதான் காரணம் என்பது இவரை பற்றி சில தகவல்கள் கூறுகின்றன. அதாவது சிறுவயதிலேருந்தே இவருக்கு சினிமா மீது ஈடுபாடு அதிகமாம்.
படித்து முடித்து விட்டு இவர் பேங்க் வேலைக்கு சென்று விட்டாராம். நாளைய இயக்குனர் என்ற பேர் போன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூட இவருக்கு நேரம் கிடைத்தது இல்லயாம். அப்போது எல்லாம் இவர் குறும்படங்கள் நிறைய செய்து ரிலீஸ் செய்து வந்திருக்கிறார்.
பிறகு இவர் தன் சொந்த காசை போட்டு “களம்” என்ற ஒரு சிறிய படத்தை எடுத்துள்ளார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றபோது, இவருக்கு சினிமாவை படம் செய்ய ஆர்வம் வந்துள்ளது. அப்போது bank-ல் வலை விட்டு நிற்பதற்காக நோட்டீஸ் போட்டுள்ளார்.
இந்த நோட்டீஸ் அவகாசம் 3 மாதத்திற்குள் ரெடியான படம்தான் “மாநகரம்”. இந்த படம் வெளியாகி இவருக்கு வெற்றிபடமாகவும், மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று தந்துள்ளது. இதற்கு அடுத்தது கைதி, விக்ரம், லியோ போன்ற படங்களை இயக்கினார். லோகேஷ் இன்று இந்த உயரத்தை அடைந்ததற்கு மாநகரம் படம்தான் காரணமாம்.