கலக்குறீங்கன்னு சொன்னதுக்கு இப்படியா என்று அனைவரும் வாயை பிளக்கும் அளவிற்கு எட்டாத உயரத்துக்கு சென்று விட்டார் அட்லி. தெறி, மெர்சல் என இவர் வைக்கிற பட பெயர்களை விட இவர் தெறிக்கவிட்டு அனைவரையும் மெர்சல் செய்கிறார். தமிழை தாண்டி பாலிவுட் வரை இவர் கொடி பறக்கிறது.
ஷாருக்கான் உடன் டின்னர், தோணியுடன் நடனம், அம்பானி வீட்டு விசேஷத்தில் முக்கியமான விஐபி என இவரது வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் இன்று பாலிவுட் வட்டாரத்தில் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
2013 ஆம் ஆண்டு ராஜா ராணி படத்தின் மூலம் தன் கேரியரை தொடங்கினார். தெறி, மெர்சல், பிகில், ஜவான் என தொடர்ந்து இவர் காட்டிய ஏறுமுகம் இவரை வேற லெவலுக்கு கொண்டு போனது, அது மட்டும் இல்லாமல் பாலிவுட் கிங் காங் ஷாருக்கானின் ஜவான் படம் ஆயிரம் கோடி வசூல் சாதனை செய்து மிரளச்செய்தது.
இதிலிருந்து அட்லிக்கு ஹிந்தி பக்கம் ஒரு பெரிய மாஸ் உருவானது. இதனை தொடர்ந்து மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இப்பொழுது அல்லு அர்ஜுனையை வைத்து ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். பெயரிடப்படாத அந்த படத்தை AA22xA6 என்று குறிப்பிட்டு வருகிறார்கள்.
அல்லு அர்ஜுனும், அட்லீயும் இணைந்து கூட்டணி போடுவதால் இதனை AA22xA6 என்று குறிப்பிட்டு வருகிறார்கள். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் சுமார் 700 கோடிகளில் தயாரிக்கிறது. இந்த படத்தை பற்றி கேட்கும் விஷயங்கள் எல்லாம் பிரமிக்க வைக்கிறது.
பான் இந்தியா படத்தையும் தாண்டி இது உலக அளவில் கவனம் ஈர்க்க ஹாலிவுட் படம் போல் ரிலீஸ் செய்ய உள்ளனர். அங்கே உள்ள பிரபலமான கம்பெனி “வார்னர் பிரதர்ஸ்” உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.தமிழ்நாட்டில் சன் பிக்சர்ஸ்சும் உலக அளவில் வார்னர் பிரதர்ஸ்சும் இந்த படத்தை வெளியிடுகின்றனர். இனிமேல் அட்லி உலக லெவலில் பிரபலமாக போகிறார்.