Vijay Sethupathi : பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்தது தலைவன் தலைவி படம். குடும்பங்கள் கொண்டாடும் என்டர்டைன்மென்ட் படமாக வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.
கணவன் மனைவிக்குள் இருக்கும் அழகான சண்டை, புரிதல் ஆகியவற்றை இந்த படம் வெளிக் கொண்டிருந்தது. இதனால் மனைவி, அம்மா என ஆண்கள் குடும்பத்தையே அழைத்து வந்து இந்த படத்தை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
குறிப்பாக படம் ஆரம்பம் முதல் இறுதி வரை சிரிக்க வைக்கிறது. இதை அடுத்து படத்தின் வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது. அதாவது முதல் நாளில் 4.50 கோடி வசூலை பெற்றிருந்தது. மேலும் படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் வந்ததால் தியேட்டரில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
தலைவன் தலைவி இரண்டாவது நாள் வசூல்
இதனால் நேற்றைய தினமான சனிக்கிழமை மட்டும் கிட்டத்தட்ட 6.80 கோடி வசூல் செய்திருக்கிறது. ஆகையால் இரண்டே நாட்களில் கிட்டத்தட்ட 10 கோடியை தாண்டி வசூல் செய்திருப்பதால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது.
மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கண்டிப்பாக நேற்றைய தினத்தை விட வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் மகாராஜா போல விஜய் சேதுபதிக்கு தலைவன் தலைவி நல்ல ஹிட் படமாக அமைந்திருக்கிறது.
விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் கெமிஸ்ட்ரி படத்தில் பக்கவாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இந்த வருடம் நிறைய குடும்பங்கள் கொண்டாடும் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் அந்த லிஸ்டில் தலைவன் தலைவி படம் இணைந்து இருக்கிறது.